பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮾ2 விந்தன் இலக்கியத் தடம் பத்திரிகைகள் சமூகச் சீரழிவிற்குத் துணை போவதை விந்தன் விமரிசனம் செய்கிறார். 'பாவம் பொழுது தானாகவே போகக் கூடியது என்பது கூட இவர்களுக்குத் தெரியாது. அதனாலேயே அதைப் போக்கக் கதைகள் வேண்டும் என்கிறார்கள். குலுங்கும் கொங்கைகளும், குலுங்காத அல்குலும் அந்தக் காலத்து காவியங்களில் அரசர்களுக்காக இடம் பெற்றது போல, கதைக்குதவாத காதலும் கருத்துக்கொவ்வாத கல்யாணமும் இந்தக் காலத்துக் கதைகளிலே இவர்களுக்காக இடம் பெற வேண்டும் என்கிறார்கள்.' இப்படிப்பட்ட கதைகளைப் பாஷாணம் என்று அழைக்கிறார் விந்தன் (விந்தன் கதைகள் x1) இவையாவும் விந்தன் கொண்டுள்ள வாழ்வு நோக்கையும், இலக்கியக் கோட்பாட்டையும் புரிந்துகொள்ள போதுமானவை. இப்பொழுது நாம் கவனிக்க வேண்டியது அவருடைய சிறுகதைகள், இந்தத் தன்மைகளைப் பெற்று விளங்குகின்றனவா என்பதாகும். விந்தன் சிறுகதைகள் எல்லாவற்றிலுமே பொதுவாக இந்தப் பண்புகள் எல்லாவற்றையும் தெளிவாகக் காண முடியும். இருப்பினும், விந்தன் அவருடைய வாழ்க்கை நெருக்கடிகள் காரணமாகவும், அவர் பணியாற்றிய பத்திரிகைகளின் தன்மை காரணமாகவும், இந்தக் கூற்றுக்களுக்குப் புறம்பான கதைகளையும் எழுதியுள்ளார். இவை எல்லாவற்றையும் தகுந்த உதாரணங்களுடன் இப்பொழுது ஆராய்வோம். விந்தனுடைய கதைகளில் புதுமைப்பித்தனைவிட மிக அதிகமான அளவிற்கு ஒரு சத்திய ஆவேசமும், சமுதாய உணர்வும் இருப்பதைக் காணமுடியும், சமுதாய விரோதி என்ற கதை இதற்கு மிகச் சிறந்த உதாரணம். சொந்தத் தகப்பனாக இருந்தும் கள்ளச் சாராயம் காய்ச்சுகிறான் என்றபடியால் அவனைப் போலீசார் வசம் ஒப்புவிக்கும் புஷ்பராஜின் கதை இது. புஷ்பராஜுக்கு ஏற்படும் தர்மாவேசம் விபீஷணனுக்கு ஏற்படும் ஆவேசத்தைப் போன்றது. நியாயம் நிலைநாட்டப்பட வேண்டும், சமூக விரோதிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் மிக உறுதியான கதாபாத்திரமாக