பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 65 ஒரு வர்க்க சமூகத்தில் இடம் பெற்றுள்ள இரு வேறு பகைமை வர்க்கங்களை விந்தன் பல சிறு கதைகளில் எடுத்துக் காட்டுகிறார். எத்தனைபேர் என்ற கதை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. பெரியசாமி, சின்னசாமி என்ற இருவர் வைரவச் செட்டியாரின் வீட்டுக் காவல்காரர்கள். இவர்களை வைரவன் செட்டியார் நாயைவிடக் கேவலமாக நடத்துகிறார். பெரியசாமி திருடனால் கொல்லப்படுகிறான். வைரவன் செட்டியார் பெரியசாமியின் பினம் கிடக்கும் பொழுதே வேறு ஒரு காவல்காரனுக்கு ஏற்பாடு செய்ய முயற்சிக்கிறார். கஸ்தூரி பவனத்தின் உரிமையாளரான வைரவன் செட்டியாரைக் கிண்டல் கலந்த யதார்த்தமான முறையில் அறிமுகப்படுத்துகிறார். (சமுதாய விரோதி - பக். 86-88) கஸ்துரி பவனம் அவருடைய சொந்த பங்களாதான். இக வாழ்க்கையிலுள்ள சுகங்களை அனுபவித்து அனுபவித்து அவர் அலுத்துப் போனவர். ஆனால் அதற்காகப் பரலோகம் சென்றுவிடவும் அவர் விரும்பவில்லை. இத்தனைக்கும், இந்த லோகத்தைவிட பரலோகம் எத்தனையோ விதத்தில் சிறந்தது என்று அவர் அறிந்திருந்தார். தாம் அறிந்த உண்மையைப் பிறருக்கு எடுத்துச் சொல்லிக்கொண்டு வந்தார். ஆனால் அவர் மட்டும் அந்த வழியைப் பின்பற்றவில்லை. வைரவன் செட்டியாரை உணர்வுபூர்வமாக இந்த முறையில் அறிமுகப்படுத்தும் ஆசிரியர், உழைப்பாளி வர்க்கத்தின் அவலநிலையை மிக உருக்கமாக அதே கிண்டல் கலந்த யதார்த்த முறையில் சித்திரிக்கிறார். அவர் கூறுகிறார் : ‘நாய்க்கு என்ன தெரியும்? எஜமானனைக் கண்டால் வாலைக் குழைக்கவும், அன்னியரைக் கண்டால் குரைக்கவும்தான் தெரியும்.” ‘எஜமான் காரில் ஏறும்போதும், இறங்கும்போதும் கதவைத் திறந்துவிட முடியுமா? ஹாரன் சத்தம் கேட்டதும் அலறியடித்துக் கொண்டு ஓடிவந்து பங்களாவின் கேட்டைத் திறந்துவிட அதற்குத் தெரியுமா?