பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 விந்தன் இலக்கியத் தடம் படுத்துபவர்கள்; அதன் பெயரைச் சொல்லி வயிறு வளர்ப்பவர்கள். இவர்களுக்கு வள்ளுவர் ஒரு காமதேனு. இதை விந்தன் இங்கு சுட்டிக் காட்டுகிறார். ஏமாற்று வேலையில் மற்றொன்று ஏழை யைப்போல் நடித்து மக்களை ஏமாற்றித் திருட்டுத்தனம் செய்வது. இதை ஒரு கதையில் விளக்குகிறார். கறார் கருப்பையா' என்ற கதையில் ரேஷன் கடை முதலாளி கள்ளத்தனமாக உணவுத் தானியங்களை விற்றான். ஆனால் ஊருக்கு வேதாந்த உபதேசம் செய்கிறான். அந்த முதலாளி, அவருடைய குமாஸ்தாவிடம் பின் வருமாறு கூறுகிறான்: 'உமக்குச் சந்தேகம் வந்துவிட்டதாக்கும். நல்ல ஆள் ஐயா நீர் அந்த வேதாந்தம் வாய் வேதாந்தம்; இந்த வேதாந்தம் வயிற்று வேதாந்தம்.” பெண் அடிமைத்தனம்’ என்ற கதையில் சாமியார்களின் போலித்தனத்தையும், மக்களின் மூட நம்பிக்கைகளையும் கண்டிக்கிறார். “உண்டுறங்குவதே யல்லாது வேறொன்றும் கண்டிராத அடியார்கள், பூதங்களுக்கு இயற்கையாக உள்ள சோம்பேறித்தனத்தால் புண்ணியத்தைச் சாக்காக வைத்துக் கொண்டு எச்சில் இலையை எடுத்துப் போடும் வேலையைக்கூட அன்னதானம் செய்பவர்கள் தலையில் கட்டி விட்ட தந்திரத்தை அந்த அம்மாள் இந்த அணுகுண்டு சகாப்தத்தில் கூட அறியாமல் இருந்தது எனக்கு ஆச்சரியமாய்த்தா இருந்தது.” இத்தகைய முறையில் போலிகளையும், ஏமாற்றித் திரிபவர்களையும் வெளிப்படுத்திக் காட்டும் போக்கைப் பெற்றுள்ள விந்தன், பால் உறவு சம்பந்தமான கதைகளையும் எழுதாமல் இல்லை. அவருடைய காதல் கதைகள் என்பவை எண்ணிக்கை அளவில் குறைவானவை. அதே சமயத்தில் இக்கதைகளில் காதல் விவகாரங்களைக் கையாளும் பொழுது மிகவும் நாகரிகமான முறையிலேயே விந்தன் நடந்து கொள்கிறார். ‘புரியாத புதிர் 'தாயிற் சிறந்த தொரு”