பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 விந்தன் இலக்கியத் தடம் மனித நேயத்தை வளர்ப்பதே அவருடைய இலக்கிய நோக்கு என்று கூறுகிறார். இந்த நோக்கின் பிரதிபலிப்பே அவருடைய சிறுகதைகள். அவற்றில் ஆழமான சமுதாய உணர்வைக் காணலாம். பணக்காரர்களைச் சாடும் போக்கைக் காணலாம். பணத்திற்காகச் சமூகத்தை ஏமாற்றுபவர்களைக் கண்டிக்கும் தன்மையைக் காணலாம். இவற்றைச் சுட்டிக் காட்டி வாசகர்களது சிந்தனையை உழைக்கும் மக்கள்பால் திருப்பும் ஒரு நிலையைக் காணலாம். இவற்றால்தான் கல்கி, விந்த ன் கதைகளைப் பற்றிக் கூறும்போது, "இவருடைய கதைகளைப் படித்தால் மனத்தை என்னவெல்லாமோ செய்கிறது’ என்று குறிப்பிட்டாரோ! தாமரை - 1978