பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 73 இரண்டும் வாய்ப் பிரயோகங்கள். மூன்றாவதான மூக்குப் பிரயோகத்தையும் அவர் கையாண்டிருந்தால் எவ்வளவோ நன்றாயிருந்திருக்கும். இன்னும் கொஞ்சம் முன்னாடியே அவர் தம் துன்பத்திலிருந்து, துயரத்திலிருந்து, கஷ்டத்திலிருந்து, காசத்திலிருந்து, ஏன், இந்தப் பாழாய்ப் போன உலகத்திலிருந்தே விடுதலையடைந்திருக்கலாம். தமிழர்களும் இன்னும் கொஞ்சம் முன்னாடியே அவருக்காகச் சந்தோஷப்பட்டிருப்பார்கள்! நினைவு நாள் கொண்டாடியிருப்பார்கள்.” உலக இயல்பைச் சுட்டிக்காட்டுவதற்காக ஒரு அரபுக் கதை, ஒளவைக் கிழவி அரசனுக்கு உணர்த்திய உண்மை என்றெல்லாம் விரிவாக எழுதிவிட்டு, விந்தன் தொடர்கிறார். உலக நியதிகளை நன்கு அறிந்து வைத்திருந்த புதுமைப்பித்தன் ஏன் கதை எழுதினார், கட்டுரை எழுதினார், கவிதை எழுதினாரென்றால் அதுதான் எழுத்தாளனின் குறும்பு, கிறுக்கு பைத்தியம்! உலகத்தில் தொன்று தொட்டு இருந்து வரும் கொடுமைகளையும் கொடுரங்களையும் அநீதிகளையும் அக்கிரமங்களையும் விசித்திரங்களையும் விநோதங்களையும் முதல் முறையாகப் பார்த்தபோது புத்தர் பெருமானுக்கு ஞானப் பைத்தியம் பிடித்தது. போதி மரத்தை நாடினார். புதுமைப்பித்தனுக்கோ எழுத்துப் பைத்தியம் பிடித்தது. பத்திரிகைத் தொழிலைத் தேடினார். புத்தர் வாழ்க்கையின் துன்பங்களைக் கண்டு வெகுண்டு ஓடினார். புதுமைப்பித்தன் அவற்றை எதிர்த்து நின்று போராடினார்.’ இந்த ரீதியில் புதுமைப்பித்தன் பற்றியும், அவருடைய எழுத்துக்களின் தன்மை பற்றியும், அவற்றைத் தக்கபடி அனுபவித்து - அவற்றை எழுதிய மேதையைத் தக்கபடி உபசரிக்கத் தவறிவிட்ட தமிழர்கள் பற்றியும் விரிவாகவே விந்தன் அந்தக் கட்டுரையில் எழுதியிருக்கிறார். எழுத்தையும் எழுத்தாளர்களையும் தக்க படி கவனிக்க இனியாவது ஒரு விதி செய்ய வேண்டும் என்று குறிப்பிடும் விந்தன், அந்தப் பொறுப்பை மத்தியதர வகுப்பார்தான் ஏற்பச் செயல்புரிய