பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 விந்தன் இலக்கியத் தடம வேண்டும் என அழுத்தமாகச் சொல்கிறார். பணக்காரார்கள் பற்றிய தனது கருத்தை சிற்றத்துடன் வெளிப்படுத்துகிறார். 'ஏழைகளோ, பணக்காரர்களுக்காக எப்பொழுதுமே தியாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பவர்கள். தங்களைப் பற்றியே அவ்வளவாகக் கவலைப்படாத அவர்கள் எழுத்தாளர்களைப் பற்றி எங்கே கவலைப்படப் போகிறார்கள்! - அவர்களுக்காக எழுத்தாளர்கள் தான் கவலைப்பட வேண்டும்’ என்றும் தெரிவிக்கிறார். நடுத்தர வர்க்கத்தினர் செய்ய வேண்டிய காரியங்கள் குறித்தும் விந்தன் அக்கட்டுரையில் பயனுள்ள ஆலோசனைகள் கூறியிருக்கிறார். விந்தன் கட்டுரைகளிலேயே நீளமானதும் முழுமையானதும் இந்தக் கட்டுரை மட்டும்தான் என்று சொல்ல வேண்டும். ‘பாரதி வாழ்ந்த பாண்டி’ என்பதும் சற்றே நீண்ட கட்டுரைதான். புதுச்சேரியையும் பாரதி நிவுைகளையும், பாரதியாரின் வாழ்வோடு சம்பந்தப்பட்டவர்களையும் இணைத்து சுவாரசியமாக எழுதப்பட்டுள்ள கட்டுரை இது. பாரதிதாசன், கவிமணி, ஆசிரியர் கல்கி ஆகியோர் பற்றிச் சிறு சிறு நினைவுக் குறிப்புகள் எழுதியிருக்கிறார். அவற்றிலும் விந்தனுடைய தனித்த நோக்கும் எழுத்தாற்றலும் புலனாகின்றன. மாக்லிம் கார்க்கியின் 'தாய்’ நாவலை எனக்குப் பிடித்த புத்தகம் என்று பாராட்டி எழுதியுள்ளார் விந்தன். இந்தக் கட்டுரையிலும் விந்தனின் எள்ளல் மேலோங்கி நிற்கிறது. ‘ஒரு பெண் எதற்காகப் பிறக்கிறாள்? ஏன் வாழ்கிறாள்? ஓர் ஆண்மகள் எதற்காகப் பிறக்கிறான்? ஏன் வாழ்கிறான்? "அவர்கள் எதற்காகப் பிறக்கிறார்களோ, ஏன் வாழ்கிறார்களோ, அது எனக்குத் தெரியாது. ஆனால் நம்முடைய நாவல்களைப் பொறுத்த வரை, அவர்கள் காதல் செய்வதற்கென்றே பிறக்கிறார்கள் கடைசியில் கல்யாணமோ, தற்கொலை யோ செய்து கொள்வதற்கென்றே வாழ்கிறார்கள் என்று கட்டுரையை ஆரம்பித்து, அவருடைய இயல்பின்படி வளர்த்திருக்கிறார். 'தாய் நாவலின கதை மாந்தரின் சிறப்பையும் சுட்டிக் காட்டியுள்ளார்.