பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 75 பொதுவாக, தமிழ் நாவல்கள் எப்படிப் பிறக்கின்றன என்று, பத்திரிகைகளுக்காக நாவல்கள் எழுதும் எழுத்தாளர்களின் செயல் முறையைக் கிண்டல் செய்து நாவல் பிறக்கிறது எனும் கட்டுரையை விந்தன் எழுதியிருக்கிறார். தமிழ் இலககியம் விமர்சகர்களையும் இக்கட்டுரையில் அவர் கண்டனம் செய்திருக்கிறார், நகைச் சுவையுடன் தன்னுடைய நாவல் எப்படிப் பிறக்கிறது என்பதை விவரித்துள்ளார். "இவ்வாறு பிறக்கும் நாவல்களெல்லாம் வளர்ந்து விடுகின்றனவா என்றால், அதுதான் இல்லை. காரணம்? அந்த மூன்று எழுத்துக்கள்தான் - வறுமை! எழுத்துக்கு வறுமை நண்பனா யிருக்கலாம். ஆனால் வாழ்வுக்கு அது பகைவனாக வல்லவா இருக்கிறது’ என்று கூறித், தனது ஏக்கங்களையும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். 'இந்த ஆசாபாசங்களுக்கு இடையே, அன்றாடம் பிரச்சினைகளுக்கு இடையே பிறந்தும் வளர முடியாத என்னுடைய நாவல்கள் - "கடவுளே! சர்வ வல்லமையுள்ள காசால் தானா என்னையும் என்னுடைய நாவல்களையும் காப்பாற்ற முடியும்? உம்மால் முடியாதா? - என்று கட்டுரையை முடிக்கிறார். அவருடைய விரக்திப் பெரு மூச்சு வாசகர்களின் உள்ளத்தில் வேதனையை எழுப்பக்கூடியது என்பதில் சந்தேகம் இல்லை. விந்தன் தனது நூல்களுக்கு எழுதிய முன்னுரை, முடிவுரை, என்னுரைகளும், பிறரது புத்தகங்களுக்கு எழுதிய அணிந்துரைகள் சிலவும் விந்தன் கட்டுரைகள் நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. அவர் கதை எழுதுவதன் நோக்கம், அவற்றைப் படிக்கிற வாசகர்களின் இயல்புகள், தமிழ்நாட்டில் கதைகள் எழுதுகிறவர்களின் தன்மைகள் பற்றி எல்லாம் சூடாகவும், சுவையாகவும், உணர்ச்சிகரமாகவும் தமது எண்ணங்களை அவற்றிலே பதிவு செய்திருக்கிறார் விந்தன். ‘போலியைச் சுட்டெரிக்கும் புதுமைகளை, வாழ்க்கையை அலசி அலசிப் பார்க்கும் ரசாயனங்களை, சமுதாயத்தின் புற்றுநோய்களுக்கு மின்சார சிகிச்சையளிக்கும் புத்தம் புது முறைகளை, குரூர வசியங்களைப் படம் பிடித்துக் காட்டி, மனித உள்ளத்திலே எங்கோ ஒரு மூலையில் செய்வதறியாது ஏங்கிக்