பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 விநதன் இலக்கியத் தடம் கிடக்கும் மனிதாபிமானத்தைத் தட்டியெழுப்பும் உணர்ச்சி மிக்க உயிரோவியங்களை, அந்த அபிமானத்துக்கு விரோதமாயிருந்த - இருந்து வருகிற மனித மிருகங்களின் மேல் வெறுப்பைக் கக்கி உங்கள் நல்வாழ்வுக்கு வழிதேட முயலும் நவயுகக் கதைகளை இன்று போல் நீங்கள் என்றும் வரவேற்று வாழ்த்தித் தமிழை வளப்படுத்த வேண்டும்; தமிழ்நாட்டை மேம்படுத்த வேண்டும் இதுவே என் எண்ணம். இதுவே என் இருபது வருட கால எழுத்து - இது இலட்சிய எழுத்தாளர் விந்தனின் இதய ஒலியாகும். 'பழைய பாசி பிடித்த வழுக்குப் பாதையை விட்டு விலகிப் புதிய பாதையிலே நடக்கத் துணிந்த எழுத்தாளர் விந்தன், தமிழில் புதிய துறைக்கு வழிகோலும் முயற்சிகளில் ஈடுபட்டதை இக்கட்டுரைகள் எடுத்துச் சொல்கின்றன. தமிழ் வாசகர்களின் ரசனைத் தரத்தைச் சிதைத்துச் சீரழிக்கின்றவர்கள் மீது விந்தனுக்குள்ள எரிச்சலும் கோபமும் இவ் எழுத்துக்களில் வெளிப்பட்டிருக்கின்றன. 'அன்பு ஆசையாகி, ஆசை அன்பானதற்குக் காரணம் இவர்களே. காதல் காமமாகி, காமம் காதலானதற்குக் காரணம் இவர்களே. பாவம் புண்ணியமாகி, புண்ணியம் பாவமானதற்குக் காரணம் இவர்களே! கலை விபசாரமாகி, விபசாரம் கலையானதற்குக் காரணம் இவர்களே. இலக்கியம் பித்தலாட்ட மாகி, பித்தலாட்டம் இலக்கியமானதற்குக் காரணம் இவர்களே! நாகரீகம் அநாகரீகமாகி, அநாகரீகம் நாகரீகமானதற்குக் காரணம் இவர்களே. பணம் பகவானாகி, பகவான் பணமானதற்குக் காரணமும் இவர்களே. இதுவரை பண்பு என்னும் பட்டுத் திரைக்குப் பின்னால் ஓடி ஒளிந்து கொண்டிருந்த இந்தப் பக்காத் திருடர்கள்’ இப்போது தமிழ் என்னும தங்கத் திரைக்குப் பின்னால் ஓடி ஒளிகிறார்கள். எது எப்படியிருப்பினும் எனக்குத் தெரிந்த வரை இருப்பவன் வெளியே நல்லவனாய் இருக்கிறான். உள்ளே பொல்லாதவனாயிருக்கிறான். இல்லாதவனோ, வெளியே பொல்லாதவனாயிருக்கிறான், உள்ளே நல்லவனாயிருக்கிறான்.