பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 77 அவனுக்கு வெளியே நல்லவனாயிருக்கச் சமூக நிலை இடங் கொடுக்கிறது. இவனுக்கு வெளியே நல்லவனாயிருக்கச் சமுக நிலை இடங்கொடுக்கவில்லை. இந்த வித்தியாசம் ஒழிய வேண்டாமா? இரு சாராரும் உள்ளும் புறமும் ஒன்றாக வாழ வேண்டாமா? இலக்கியம் அதற்கு உதவ வேண்டாமா? இவ்விதம் தனது எண்ணங்களை எடுத்துக் கூறும் விந்தனின் உள்ளத்தையும் உயர் நோக்கங்களையும் புரிந்து கொள்வதற்கு அவருடைய கட்டுரைகள் உதவுகின்றன. பொதுவான சில குணச்சித்திர விவரிப்புகளாக எழுதப்பட்டுள்ள இந்நாட்டு மன்னர்கள் என்பவையும். தனிப்பட்ட சில மனிதர்களின் சிறப்பியல்புகளை வர்ணிக்கும் "இதோ ஒரு சுயமரியாதைக்காரர்' வரிசையும் புதுமையும் நயமும் நிறைந்த சொற்சிததிரங்கள் ஆகும் வாழ்க்கையில் பிடிப்பும் தளராத தன்னம்பிக்கையும் உடையவர்களது மன உறுதியையும் அவர்களது உழைப்பின் உயர்வையும் எடுத்துச் சொல்கின்றன. இவை. 1998