பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 79 அவருடைய ஆவேசம் மனிதன் இதழ் ஒன்றில் பின்வருமாறு வெடித்தது : ‘உலக இலக்கியங்களிலே, உலக மொழிகளிலே, எத்தனையோ விதமான புதுமைகள், புரட்சிகள் தினம் தினம் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கின்றன. ஏன் நம்மை அடுத்திருக்கும் கேரள நாட்டின் மலையாள இலக்கியங்களிலும் ஆந்திர நாட்டின் தெலுங்கு இலக்கியங்களிலும்கூட அவற்றை நாம் பார்க்கிறோம். பார்த்துப் பெருமூச்சு விடுகிறோம். அப்படியிருக்கத் தமிழும் தமிழ்நாடும் மட்டும் பழமை என்னும் குட்டையில் ஏன் இன்னும் மட்டை போல் ஊறிக் கொண்டிருக்க வேண்டும்? காரணம் இருக்கிறது. ஆம், காரணம் இருக்கத்தான் இருக்கிறது. அன்றிலிருந்து இன்றுவரை சில சைத்தான்கள் தமிழ்நாட்டு இலக்கிய பீடத்தைப் பற்றிக்கொண்டு நாசம் புரிந்து வருகின்றன. அந்தச் சைத்தன்களைச் சுற்றிச் சனியன்கள் கூடிக் கொம்மாளம் அடிக்கின்றன. இதுகளுக்குப் புதுமையும் தெரியாது; புடலங்காயும் தெரியாது. எதையெல்லாமோ புதுமை புதுமை என்று கூறிக்கொண்டு அபத்தங்களை, அலங்கார வார்த்தைகளை அள்ளி வீசி, குடும்பக் கதைகள் என்ற பேரிலே ஜீவனற்ற நபும் சக இலக்கியங்களைப் படைத்துக் குப்பைகளைக் குன்றுகளாகவும் கோபுரங்களாகவும் உயர்த்திக் காட்டி உபாதானம் பெறுகின்றன.” விந்தனின் இந்த ஆவேசத்தில் வெடித்த பல சிறுகதைகள் வாசகரின் மன நிம்மதியைக் குலைக்கும் சம்பவங்களைக் கொண்டிருந்தன. சிந்திக்க வைத்தன. கருவுற்ற பெண் ஒருத்தியால் வீட்டுக்குப் பணிவிடை செய்ய இயலவில்லை என்ற காரணத்துக்காக அவளுடைய மாமியார் அவளைத் தாய்வீட்டுக்கு அனுப்புகிறாள். கணவன் தன்மீது கருத்தாக இருக்கும்பொழுது, தான் இவ்வாறு வெளியேற்றப்படுவதைப் பற்றி அந்தப் பெண் சிந்திக்கிறாள். வீட்டிலிருந்த பசுவின் பால் வற்றியபோது அதுவும் வெளியேற்றப்பட்டதைப் பற்றி நினைவுகூர்கிறாள். அந்தப் பசுவினால் பயனில்லை என்று உணர்ந்ததைப்போல, தானும் இனி வீட்டு