பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் - க. சமுத்திரம் "தமிழ் இலக்கியத்தில், பாட்டாளி வர்க்கப் படைப்பாலும், அவர்களுள் ஒருவராய் வாழ்ந்த நெறியாலும், எந்த எழுத்தாளனும் தொடாத இலக்கியச் சிகரத்தைத் தொட்ட வீச்சாலும், தக்காரும் மிக்காரும் இல்லாத தனிப்பெரும் படைப்பாளியான விந்தன், திறனாய்வாளர்களாலும் முட்டாள் வாசகப் பரப்பாலும், அமுக்கப்பட்டது போல், இந்த மணிமேகலையையும், இலக்கியப் பேச்சாளர்கள் அமுக்கி விட்டார்கள்.” சரியாகப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1983ஆம் ஆண்டு வெளியான எனது நெருப்பு தடயங்கள் என்ற நாவலில் அதன் நாயகியும், தமிழ்ப் பேராசிரியையுமான, தமிழரசி இப்படி நினைப்பதாக எழுதினேன். கண்ணகியைவிட சிறந்த பாத்திரமான மணிமேகலைப் பாத்திரம், கண்ணகிக்கு வழிவிட்டு அமுக்கப்பட்டது போல், ஒரு குறிப்பிட்ட எழுத்தாளனை முதன்மை படுத்துவதற்காக விந்தன் இலக்கிய உலகில் ஓரளவு மறைக்கப்பட்டார் என்ற என் கருத்தைத்தான் தமிழரசி பிரதிபலித்தாள். இந்த நாவலுக்கு முன்னுரை எழுதிய டாக்டர் மா. ராமலிங்கம் (எழில் முதல்வன்) அவர்கள் இதைக் குறிப்பிட்டு, யாரும், யாரையும் அமுக்கி விட முடியாது. திறமான புலமையெனில் எத்தனை பேர் சேர்ந்து அமுக்கினாலும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டுவிடும் ஆற்றல் அதற்கு உண்டு. என்றார். முனைவர் எழில் முதல்வன் அவர்கள், சுட்டிக் காட்டியது முழு உண்மை இல்லையானாலும் பாதிக்கு மேல் உண்மைதான். இன்று