பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 83 விந்தனின் படைப்புகள் மறுவாசிப்பு செய்யப்படுகின்றன. அவரை மக்கள் எழுத்தாளர் என்ற தகுதியான முத்திரையுடன், தோழர் மு. பரமசிவம் அவர்கள், அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதியிருக்கிறார். இப்போது விந்தன் மலரும் வெளியாகிறது. விந்தன் அவர்களிடம் இளம் படைப்பாளியாக நான் இருந்த காலந்தொட்டே ஒரு பிரமிப்பும், அவர் எனது இலக்கிய முன்னோர் என்ற எண்ணமும் என்னுள் ஏற்பட்டது. இவ்வளவுக்கும் அவரின் படைப்புகள்தான் எனக்குத் தெரியுமே தவிர, அந்தப் படைப்பாளி அல்ல... என்னைப் பொறுப்பாசியராகக் கொண்ட மத்திய அரசு திட்டக்குழுவின் திட்டம் என்ற பத்திரிகையில் கடைசி அட்டையில், விந்தன் அவர்களைப் பற்றித் தோழர் மு. பரமசிவம் எழுதிய கட்டுரையை பிரசுரித்தது எனக்கு இன்னும் நினைவுக்கு வருகிறது. அவர் காலமானபோது நான் கதை எழுதத் துவங்கினேன். இந்த வகையில் நான் இரண்டாவது விந்தன் என்ற உணர்வு ஏற்படுகிறது. என்றாலும் - தமிழ் இலக்கியத்தின் மகத்தான படைப்பாளியான விந்தன் பேசப்பட வேண்டிய அளவிற்குப் பேசப்படவில்லை. மேட்டுக்குடி இலக்கிய நீரோக்களால் அவர் படைப்புகள் எரியூட்டப்படுகின்றன. ஆனாலும் அந்தச் சாம்பல் கூட அவரைச் சுட்டுப் பொசுக்குகிறது. 1983 ஆம் ஆண்டே மேற்குறிப்பிட்ட கருத்தை நான் சொல்வதற்குரிய சமூக வாசகத்தளம் எப்படிப்பட்டது..? முட்டாள்களின் சொர்க்கம் சமூகச் சிந்தயைாளர் அ.மா.சாமி அவர்கள் தான் எழுதிய "இந்திய விடுதலைப் போர் செந்தமிழ் தந்த சீர் : என்ற நூலில் குறிப்பிட்டது போல், விடுதலைப் போராட்டத்தைப் பற்றிய முழுவீச்சு, தமிழ் இலக்கியத்தில் அந்தக் காலக் கட்டத்தில் இடம் பெற வேண்டிய அளவிற்கு இடம் பெறவில்லை விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்ட எழுத்தாளர்களை உள்ளடக்கிய மணிக்கொடி கூட விடுதலைப் போராட்ட தாக்கத்தைப் பதிவு செய்யவில்லை. தக்காரும், மிக்காரும் இல்லாத படைப்பாளியாகக் கருதப்படும் புதுமைப்பித்தன்கூட விடுதலைப் போராட்டத்தை எடுத்தேன, கவிழ்தேன் என்ற முறையில்தான் கொச்சைப்படுத்தியிருக்கிறார்.