பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 விந்தன் இலக்கியத் தடம் அந்தக் காலத்து படைப்பாளிகள், தமது காலக்கட்டத்தில் நிகழ்ந்த மகத்தான போராட்டம் அவரின் மனதில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை எனபது என்னுள் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்தப் பாராமுக நீரோதனத்திற்கு மகாகவி பாரதியாரும் கல்கியுமே விதிவிலக்கு. ஆனாலும் இன்றுகூட புதுமைப்பித்தனின இந்த வேண்டா வெறுப்பு அணுகுமுறை சுட்டிக்காட்டப்படுவதில்லை , பேராசிரியர் கல்கி அவர்களின் படைப்புகளில்கூட பொன்னியின் செல்வன்,’ 'சிவகாமி சபதம்’ ஆகிய சரித்திர நாவல்கள்தாம் நிலை நிறுத்தப்படுகின்றன. விடுதலைப் போராட்ட வேள்வியைச் சித்திரிக்கும் அவரது 'அலை ஓசை, தியாக பூமி போன்ற நாவல்கள் பேசப்படுவதே இல்லை. இப்போது கூட. சி.சு. செல்லப்பா அவர்கள் தாம் கலந்து கொண்ட விடுதலைப் போாாட்ட வேள்வியைச் சித்திரிக்கும் நாவலான பெரிதாகப பேசப்படவிலலை. இதிலிருந்து நமக்குத் தெரிவது, தமிழ் இலக்கியவாதிகளும், வாசகப்பரப்பும் இன்னும் முட்டாளின் சொர்க்கத்திலேயே வாழ்கிறது. இலக்கியம் என்பது சமகால வெளிப்பாடுகளாக இல்லாமல் நித்தியத்துவ நெறிகளை விளக்கும் படைப்பாக இருக்க வேண்டுமென்ற தவறான அணுகுமுறையே நிலவி வருகிறது. இந்தப் பின்னணியில் விந்தனையும், அவரது படைப்புக்களையும், அணுக வேண்டியதுள்ளது தமிழ் சமூக இலக்கிய சக்திகள் முட்டாள் சொர்கக வாசிகளுக்கு மாற்றாக உருவாகியிருக்கும், முற்போககு படைப்பாளிகள் மூலம் விநதன் வெளிப்படுத்தப்படுகிறார். காலப் போக்கில் பாட்டாளிக் கலாச்சாரம் மேலோங்கும் போது விந்தனும், இலக்கிய கான்ஸ் டேபிள்களை ஊடுருவி, இலக்கிய முதல்வர் ஆவார். இதில சந்தேகமில்லை. பன்முகத் தன்மை மு. பரமசிவம் அவர்களின் விந்தன் பற்றிய வரலாற்று நூலைப் படித்தபோது, விந்தனில் ஒன்றிவிட்டேன்.... கிட்டததட்ட என்னுடைய சுபாவமே அவருக்கு இருநதிருப்பதாக அனுமானிக்கிறேன்... ஆனாலும் மத்திய அரசுப் பணியில் நான் இருந்ததால் விந்தனைப்