பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 விந்தன் இலக்கியத் தடம் விந்தனின் படைப்புகள் விஞ்சி நிற்கின்றனவா அல்லது விந்தனா - என்று ஒரு பட்டி மண்டபமே நடத்தலாம்... என் வாழ்க்கையே ஒரு செய்தி என்று அண்ணல் காந்தி சொன்னது போல், விந்தனின் பன்முக வாழ்க்கையே அவரது படைப்புகள். கடலே இணை என்பது போல் விந்தன் நடைக்கு விந்தன் நடையே இணை..., புதுமைப்பித்தன் படிப்பாளிகள் மகிழ, எள்ளல் நடையைக் கொடுத்தார். விந்தனோ பாமர மக்களுக்கும் புரியும் அளவிற்கு எள்ளல் நடையை எளிமைப்படுத்தினார். அவரது சிறுகதைத் தொகுப்பான நவீன விக்கிரமாதித்தன்' இதற்கொரு உதாரணம்... கலைஞர் அவர்களையும், சாவி அவர்களையும் நண்பர்களாக்கிவர் விந்தன். ஆனாலும் தனது வீடு ஏலத்தில் போகிற நிலமை ஏற்பட்டபோது, அப்போதும் முதலமைச்சராக இருந்த கலைஞரிடம் சொல்லத் தயங்கியவர் என்று தினமணிக் கதிரின் அப்போதைய துணை ஆசிரியரான திரு.சி.ஆர். கண்ணன் அவர்கள் பத்தாண்டுகளுக்கு முன்பு என்னிடம் தெரிவித்தார். இவரது ஒரு பக்க சிறுகதையான நடக்காதது. ஓராயிரம் கருத்துகளை உள்ளடக்கியது. பொதுவாக இவரது படைப்புக்கள், தோழன் தோழனுக்குச் சொல்வதைப் போன்றது... தெருவிலே நடக்கும் பாமர மக்கள் நடையை சிறிது தளர்த்தியோ, அல்லது நிறுத்தியோ தத்தம் கஷ்டங்களை அல்லது மகிழ்ச்சியான சங்கதிகளை எப்படிப்பட்ட முகபாவத்துடன் ஏற்ற இறக்க குரலில் அந்தக் குரலுக்குரிய மொழி அடர்த்தியில் பேசுவார்களோ, அப்படிப்பட்ட நடை விந்தனது மொழி நடை... இந்த மொழி நடையை இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும், அதற்குப் பிறகு வரும் பல்லாண்டு, பல்லாண்டு நூற்றாண்டுகளிலும் புரிந்து கொள்ளலாம். இந்த வகையில் இவர் இயற்றமிழில் ஒரு பாரதி. இலக்கிய அணுகுமுறை விந்தனின் இலக்கிய அணுகுமுறையைப் படித்ததும் நான் ஆச்சரியப்பட்டேன்... நானே நான் பேசியதைக் கேட்பதுபோல்