பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதி பாதையில் விந்தன் - தி,க,சிவசங்கரன் இன்றைய தமிழ் இலக்கியத்தைப் பாரதி பாதையில் வளர்த்த எழுத்தாளர்களில் விந்தனுனுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. பாரதியின் லட்சியங்களில் விந்தன் ஊறித் திளைத்திருந்தார் என்பதை அவரது படைப்புகள் காட்டுகின்றன. 'ஏழையென்றும். அடிமையென்றும் எவனுமில்லை ஜாதியில் இழிவுகொண்ட மனிதரென்ப திந்தியாவில் இல்லையே, வாழி கல்வி செல்வமெய்தி மனமகிழ்ந்து கூடியே மனிதர்யாரு மொரு நிகர் ஸ்மானமாக வாழ்வமே.” இது பாரதியின் மணிவாக்கு. இதைத் தமது இதயநாதமாகக் கொண்டிருந்தார் விந்தன். இந்தக் கோட்பாட்டில் சமரசம் எதுவும் செய்து கொள்ளாத சிறந்த எழுத்தாளனாக அவர் திகழ்ந்தார். 'மனிதன்! ஆ! அந்தச் சொல் எத்தனை பெருமைக்குரியது" என்றார் மாக்சிம் கார்க்கி மனிதனின் பெருமையை- உழைப்பாளி மக்களின் உயர்வைப் பாடிய எழுத்துக்களே. விந்தனின் படைப்புக்கள். உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்யும் விந்தன், வீனில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்கிறார். இதற்காக நையாணடி என்னும் வலிமை மிக்க ஆயுதத்தை ஏந்துகிறார். இந்த ஆயுதம் அவரது வெற்றிக்கு அடிப்படையாக விளங்குகிறது. எல்லோரும் ஒன்றென்னும் காலத்தை, பொய்யும் ஏமாற்றும் தொலைகின்ற காலத்தை, இனி நல்லோர் பெரியோர் என்னும்