பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 91 இவற்றைத் தமது படைப்புகள் மூலம் அம்பலப்படுத்தியவர்கள்; இதற்காகத் தமது எழுத்துக்களில் அங்கதம் (நையாண்டி) என்னும் சுவையைச் சிறப்பாகக் கையாண்டவர்கள். ‘நாட்டு மக்கள் நலமுற்று வாழவும், நானிலத்தார் மேனிலை எய்தவும், இலக்கியம் பயன்பட வேண்டும் என்ற கொள்கை உடையவர்கள். இவர்களது அழகியல் கோட்பாடு, சமுதாயத்தேடு நெருங்கிய தொடர்புடையது; சமூக - பொருளாதார உறவுகளோடு பின்னிப் பிணைந்தது. வேறு விதமாகச் சொன்னால் இன்றைய சமுதாயத்தை நோய் பிடித்த சமுதாயமாக இவர்கள் கருதினார்கள். சாதி மத பேதங்கள், பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், அறியாமை, மூட நம்பிக்கை, மனிதனை மனிதன் சுரண்டுதல், ஏமாற்றுதல், வஞ்சித்தல், அடக்கி ஒடுக்குதல் - இவற்றை இந்தச் சமதாயத்தில் கண்ட போதெல்லாம் இவர்கள் குமுறினார்கள்; சீறினார்கள்; சிந்தித்தார்கள்; இதுவே இவர்களது ஆளுமையாக மாறியது. இந்த ஆளுமை யைத்தான் தமது படைப்புக்களிலே வெளிப்படுத்தினார்கள். இவர்கள் கலையுள்ளம் படைத்தவர்கள்; கலை நயமும் நுட்பமும் தெரிந்தவர்கள். எனவே தமது உணர்வுகளுக்கும், சிந்தனைகளுக்கும், தத்துவங்களுக்கும், தரிசனங்களுக்கும், கலை வடிவம் தந்து, நம்மையெல்லாம் கவருகிறார்கள். தமது இலக்கியக் கொள்கை பற்றி விந்தன் கூறுகிறார்; ‘போலியைச் சுட்டெரிக்கும் புதுமைகளை, வாழ்க்கையை அலசி அலசிப் பரிசீலிக்கும் ரசாயனங்களை, சமுதாயத்தின் புற்று நோய்களுக்கு மின்சார சிகிச்சை அளிக்கும் குரூர வசீகரங்களைப் படம் பிடித்துக் காட்டி, மனித உள்ளத்தில் எங்கோ ஒரு மூலையில் செய்வதறியாது ஏங்கிக் கிடக்கும் மனிதாபிமானத்தைத் தட்டி யெழுப்பும் உயிரோவியங்களை, அந்த அபிமானத்திற்கு விரோதமாயிருக்கிற, இருந்து வருகிற மனித மிருகங்கள் மேல் வெறுப்பைக் கக்கி, உங்கள் நல்வாழ்விற்கு வழி தேட முயலும் நவயுகக் கதைகளை, இன்று போல நீங்கள் என்றும் வரவேற்று