பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் 'கல்கி குறித்து விந்தன் சொன்ன கருத்து அவருக்கும் பொருந்தும். அந்த அளவுக்கு தமது அறிவை ഋഠൂഠങ്ങ தற்காலத் தமிழ் இலக்கியத்துறையில் பயன்படுத்தியிருக்கிறார் விந்தன். 1947 வரையில் சிறந்த சிறுகதை எழுத்தாளராக அறியப்பட்டவர். அரசியல், பொருளாதாரப் பிரச்சினை களிலும் மிகுந்த ஈடுபாடுடையவர் என்பதை அடையாளப்படுத்தும் வகையில் தொழிலாளர் பிரச்சினைகளை, குறிப்பாக ഖോ நிறுத்தங்களை முதன்மைப்படுத்தி ஒரே இரவில் பன்னிரெண்டு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதி 'வேலை நிறுத்தம் ஏன்?" என்ற பெயரில் சிறிய நூல் ஒன்றைப் படைத்தார். 'வேலை நிறுத்தம் ஏன்?' என்ற சிறு நூல் தான் விந்தன் எழுதிய முதல் கட்டுரைத்தொகுப்பு. தமது கருத்துக்களைக் கதைகள் மூலமாகவே சொல்லுவதில் மிகுந்த கவனத்தோடு இருந்த விந்தனை, சில நிகழ்வுகளும் சில நண்பர்களின் வற்புறுத்தலும் கட்டுரைகள் எழுத வைத்தன. அதன் பொருட்டே பொன்னி' இதழில், 'புகையிலையும் புதுமைப்பித்தனும்', 'கல்கி'யில் நாவல் பிறக்கிறது', ஆனந்த விகடனில் 'எனக்குப் பிடித்த புத்தகம்' ஆகிய கட்டுரைகள் எழுதப்பட்டன. இந்த மூன்று கட்டுரைகளும் கனமானவை. தமது சமகால எழுத்தாளர் புதுமைப்பித்தன்மீது விந்தன் கொண்டிருந்த மதிப்பையும், அந்த இலட்சியவாதிக்கு தமிழர் சமுதாயம் இழைத்த கொடுமைகளையும் மனக் கொதிப்போடும் கோபத்தோடும் வெளிப்படுத்துபவர். அடுத்து, தமது நாவல்கள் பிறப்பதற்கு இடையூறாக இருந்துவரும் 烹调