பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 விந்தன் கட்டுரைகள் அதிலும் இந்த இதழ் முகப்பிலே காட்சியளிக்கும் இருவர் - தோற்றத்திலேயே தாங்கள் இன்னார் என்பதைக் காட்டிக்கொள் ளும் இருவர் - இந்நாட்டு மன்னரும் மகாராணியும் மட்டுமல்ல; உலகத்தின் எஜமானர்கள் ஏக சக்ராதிபதிகள் கொடுத்து வைத்த வர்கள்! கோலின்றிக் குடியாட்சி நடத்துபவர்கள்! அவர்கள் இல்லையென்றால் உயிரே கிடையாது; உலகம் கிடையாது, கடவுளுக்கோ நமக்கோ ஏதும் கிடையாது கேட்டா லும் சரி, கேட்காவிட்டாலும் சரி, இவர்களைச் சிலர் பாராட்டிக் கொண்டே இருக்கிறார்கள், அழுதால்கூட அவர்களை அடிக்கடி சிரிக்க வைக்க முயன்று கொண்டே இருக்கிறார்கள் - அதுவும் எப்படி? 'ஆஹா ஆனானப்பட்ட காந்தி மகானையே அரை நிர்வா னப் பக்கிரியாக்கிய அண்ணல்களல்லவா நீங்கள்! - உங்கள் கஞ்சியில் இல்லாத இன்பமா எங்கள் காப்பியில் இருக்கிறது? உங்கள் குடிசையில் இல்லாத இன்பமா எங்கள் கூனுர் பங்களா வில் இருக்கிறது? உங்கள் கிராமத்தில் இல்லாத இன்பமா எங்கள் கூவம் நகரத்தில் இருக்கிறது?' என்றெல்லாம் சதா அவர்களுடைய சிண்டைத் தட்டி விட்டுக்கொண்டே இருக்கிறார்கள் ஆனால் அவர்களுக்கோ அதைக் கேட்கக்கூட நேரம் இல்லை! உழைப்பு, உழைப்பு என்று உழைத்துக் கொண்டே இருக் கிறார்கள், வெய்யிலையும் மழையையும் பொருட்படுத்தாமல் ஈனத்தையும் மானத்தையும் மட்டுமே பொருட்படுத்தித் தங்க ளுக்கு வரும் இன்னல்களையெல்லாம் தாங்கிக் கொண்டிருக்கிறார் கள். அதற்காக உல்லாசபுரிவாசிகள் அவர்களைச் சும்மா விட்டு விட முடியுமா? - விட்டால் சோற்றுக்கு வழி? - 'பாராட்டு வோம், பாராட்டுவோம், பாராட்டிக்கொண்டே இருப்போம்' என்கி றார்கள்!