பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதோ ஒரு சுயமரியாதைக்காரர் ! -1 தோழர் ராம்ஜி இவர் திரு. ஈ.வெ. ராமசாமிப் பெரியாரின் சீடரா? - இல்லை திரு. அண்ணாத்துரையின் திரு அவதாரமா? இல்லை; இல் லவே இல்லை புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் தாசானுதாசனா - ஊஹாம், அதுவும் இல்லை! ஆனால் இவர் ஒரு சுயமரியாதைக்காரர், அசல் சுயமரியாதைக் காரர், அப்பட்டமான சுயமரியாதைக்காரர்! தென்னாடு இன்று எத்தனையோ தமிழர்களைத் தெருவில் பிச்சை எடுக்க விட்டிருக்கிறது, தமிழர்களும் கொஞ்சங்கூடக் கூசாமல் எடுத்ததற்கெல்லாம் கையேந்தித் தங்கள் தன்மானத்தைக் காலனாவுக்கும் அரையனாவுக்கும் தெருவெல்லாம் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். சர்க்கார் இவர்களைக் கவனிப்பதாயிருந்தால் அது இந்தக் காலத்தில் அவ்வளவு சுலபமான காரியமல்ல - அதற்கு முதலில் கமிட்டி அமைக்க வேண்டும், அந்தக் கமிட்டி திட்டம் வகுக்க வேண்டும், அந்தத் திட்டத்தைச் சட்டசபை ஏற்றுக்கொள்ள வேண் டும்; அது அமுலுக்கு வந்தால் அதிகாரிகள் பிச்சைக்காரர்களிடம் லஞ்சம் கேட்காமல் இருக்க வேண்டும்- இப்படி எத்தனையோ தொல்லைகள் சர்க்காருக்கு! இதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் சென்னை சைனா பஜா ரில் மாலை முழுதும் பெருமையுடன் பவனி வரும் இந்தப் பிறவிக்