பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதோ ஒரு சுயமரியாதைக்காரர் ! -2 தோழர் ஆரோக்கியசாமி நமது அருமை ஒளவைப் பாட்டி மானிடப்பிறவியைப் பற்றி 'அரிது’ ஜாபிதா ஒன்றைச் சமர்ப்பித்திருக்கிறாள் அல்லவா? அந்த அரிது, 'அபாய அறிவிப்பு'க்கெல்லாம் டிமிக்கி கொடுத்துவிட் டுத் தோழர் ஆரோக்கியசாமி பிறக்கும்போது நன்றாகத்தான் பிறந்தார் அந்தச் சமயத்திலே அவர் எந்தவித 'அரிது', அணுக் குண்டுக்கும் இலக்காகவில்லை பிறகுதான் அந்தப் பாழாய்ப் போன 'அரிது’ வந்து அவரை அண்டியது வாழ்வின் வசந்தப் பருவத்திலே, அவரது கால்களில் ஒன்றைப் பலி வாங்கிக்கொண்டு விட்டது, எமதுதனைப்போல வந்த கார் ஒன்று! - பாவம், ஒற். றைக் காலை இழந்துவிட்ட ஆரோக்கியசாமி ஒருகணம் சிந்தித்தார்; எதிர்காலம் அவரைப்பார்த்துப் பயங்கரமாகச் சிரித்தது - மேலும் சிந்தித்தார்; அதே காலம் 'கோ'வெனக் கதறி அழுதது! அதற்குமேலும் சிந்தித்தார். இப்போது அவருடைய மனக் கண் முன் காயமே இது பொய்யடா என்ற ஹிதோபதேசம் எதிரொலித்தது. எப்படியாவது நாம் வாழவேண்டுமென்ற அவரது நம்பிக்கைக்குப் பங்கமளிக்கவில்லை, 'மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்' என்ற சோம்பேறிக் குரலும் அவர் பஞ்சை நெஞ்சிலே பண் பாடவில்லை 'அம்மா! பிச்சை தாயே, காலில்லாத நொண்டி, தாயே!' என்ற அபயச் சொல் அபயம் தரவில்லை; தன்மானத்தை விலை பேசி, தன்னம்பிக்கையைக் காற்றில் பறக்கவிட அமுதசுர பித் திரு ஒடும் அவருக்கு முன்னால் பிரசன்னமாக வில்லை - ஏன், உலகளந்த பகவான் கூட அவருக்குப் படியளப்பதாக உறுதி கூறவில்லை. பின்னர்?