பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 விந்தன் கட்டுரைகள் அவரது மனிதப் பண்பிலே பண்பட்ட தன்மான உணர்ச்சி கம்பீரமாக முன் நின்று குரல் கொடுத்தது; வாழ வழிவகுத்துத் தந்தது, ஊன்றுகோல் ஒன்று, 'இதோ, உனக்கு யார் தோழனா யில்லாவிட்டாலும் நான் தோழனாயிருக்கத் தயார்!’ என்று குதித்துக்கொண்டு வந்து எதிரே நின்றது: அத்துடன் சைக்கிளையும் துணையாகக் கொண்டு அவர் உலகத்திலே ஊன்ற முடியாத காலை ஊன்றினார், எல்லாம் வல்ல கர்த்தரின் கருணையும், கோபாலபுரம் பத்திரிகை விற்பனையாளர் ஜனாப் அலாவுதீனின் அருளும் அவருக்குக் கிடைத்தன ஆரோக்கி யசாமி மனிதரானார், 'தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா!' என்று சங்கநாதம் செய்தார் கடந்த இருபது ஆண்டுகளாக, சாயபு அவர்களிடம் தோழர் ஆரோக்கியசாமி பணியாற்றுகிறார் கையில் பல பத்திரிகைகளு டன் 'சுதேசமித்திரன், விடுதலை!" என்று தெருவெல்லாம் 'தமிழ் முழக்கம்' செய்வதோடு, 'மெயில், எக்ஸ்பிரஸ்' என்று ஆங்கில முழக்க'மும் செய்து வருகிறார் தன்மானம் மிக்க தனயனின் எடுத்துக்காட்டான வாழ்க்கையைக்கானக் கொடுத்து வைக்காதவர் கள் தோழர் ஆரோக்கியசாமியின் பெற்றோர்கள். அவருடைய ரத்த பாசத்தில் சமபங்கு பெறும் பாக்கியம் பெற்றவர்கள், அவரது அருமைத் தங்கையும் அன்புத் தம்பியும். தங்கைக்குத் திருமணம் முடிந்துவிட்டது; தம்பிக்கும் கல்யாணம் முடிந்துவிட்டால் கவ லையே கிடையாதாம் இந்த அண்ணனுக்கு. ஆம், அவர்களுக்காக இவர் பிரம்மசாரியாக இருந்தார்; இன்னும் இருக்கிறார்! உடன் பிறந்தவர்களின் இன்பமும் நல்வாழ்வும் தன்னுடைய இன்பம், தன்னுடைய நல்வாழ்வு என்று சொல்லிச் சொல்லிப் பரவசப்படுகிறார் இவர். இத்தகைய தியாகச் சிலரைத் தமையனாகப் பெற்ற தம்பியும் தங்கையும் கொடுத்து வைத்தவர்கள்!