பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதோ ஒரு சுயமரியாதைக்காரர் ! -3 தோழர் லோகநாதன் & அக்கிரகாரத்திலே பிறந்த அதிசயப் பிறவி'யாகவோ அல் லது தீரமிக்க திராவிட'ராகவோ இல்லாமல் - 'சுயமரியாதை இயக்கம்' என்கிற பழைய இயக்கத்தில் பங்கு கொண்டவராக இருந்து, 'புதிய கட்சிக்கார'ராக மாறிப் 'பாரம்பரியம்' பேசாமல்கட்சிகளில் கிடைக்கும் அங்கத்தினர் சீட்டுகளைப் பெற்றதுமே மனிதப் பண்புகள் அத்தனையும் பெற்றுவிட்டதாக மனப்பால் குடிக்காமல் 'சுயமரியாதைக்காரர்களாக வாழ்ந்து காட்டுவோர்' வரிசையில் தோழர் லோகநாதன் தனிச் சிறப்புடையவராகக் காணப்படுகிறார் செஞ்சித் தாலுக்காவிலே உள்ள ஒரு சின்னஞ் சிறு கிராமத் திலே பிறந்து சென்னையிலே வளர்ந்த இவருக்கு, வயது பதினாலு ஆகும்பொழுதே விதி இவருடன் விளையாடி விட்டது. ஏதோ ஒரு பண்டிகை, குழந்தை லோகநாதன் தளிர்க் கரங்க ளால் பட்டாசுகளைக் கொளுத்திப் போட்டு விட்டு, அவை வெடிப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். அப்பொழுது விதியும் தன்னுடன் சேர்ந்து விளையாடப் போகிறது என்பதை - அறிஞர்களாலும் அறியமுடியாத அந்த உண்மையை - பதினான்கு வயதுச் சிறுவனால் அறிந்துகொள்ள முடியுமா? 'யானை வெடி" ஒன்றைக் கொளுத்தியபோது அந்த வெடி பயங்கர மாய் வெடித்துச் சிதறி அவன் பிஞ்சுக் கரங்களைத் தாக்கிவிட்டது, தீப்பட்டு வெந்த கைகளுடன் துடித்துக் கதறிய சிறுவனை எடுத்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஒடினர் பெற்றோர். அங்கே ஊசி போட்டார்கள் மருந்து வைத்துக் கட்டினார்கள் இன்னும் பல சிகிச்சைகள் செய்து பார்த்தார்கள் என்ன செய்தும் குழந்தை யின் பிஞ்சுக் கரங்களை மட்டும் அவர்களால் காப்பாற்ற முடிய