பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வறுமையை வசதிகுறைவை எண்ணிப்பார்த்து 'பிறந்தும் வளரமுடியாத' στώύτ நாவல்களை காசால்தான் காப்பாற்றமுடியுமா? கடவுளே உன்னால் காப்பாற்ற முடியாதா?’ என்று கண்கலங்கி நிற்பதும், உலகப் புகழ்பெற்ற மாக்கிம் கார்க்கியின் தாய் நாவலில் உரத்த சிந்தனையோடு அமைந்துள்ள உரையாடல்களை அதிலும் காதலர்களிடையே நிகழும் உரையாடலில் வெளிப்படும் நாட்டுப்பற்றை, போர்க்களத்தை நோக்கி காதலர்கள் புறப்படும் எழுச்சியே தமக்குப் பிடித்தமானவை என்று எழுதும்போதும், விந்தனின் இலக்கிய நோக்கு எத்தகையது என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது. மேலும், பாரதியார், பாரதிதாசன், கவிமணி, கல்கி போன்றவர்களைப் பற்றி எழுதியிருப்பதும் சிறப்பானவை

  • 背 *

வித்தனின் படைப்புகளுக்கு கல்கி முதல் க.நா சு வரை முன்னுரை எழுதியிருக்கிறார்கள் அதில் கல்கியின் முன்னுரை விந்தனை எக்காலத்திலும் எவருக்கும் உண்மையாகவும் உயர்வாகவும் அறிமுகப்படுத்தும் இலக்கியத்தரம் வாய்ந்த முன்னுரை அத்தகைய சிறப்புடைய முன்னுரைகளைத் தனது படைப்புகளுக்கும் பிறரின் எழுத்துகளுக்கும் முன்னுரையாகவும், அணிந்துரையாகவும் எழுதியிருக்கிறார் விந்தன் அவற்றில் 'கண் திறக்குமா?', 'சுயம்வரம்' போன்ற தனது நாவல்களுக்கும், "சரவிளக்கு' என்னும் இளம் எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்புக்கும் எழுதியுள்ள முன்னுரைகளை உதாரணமாகச் சொல்லலாம் xi