பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 விந்தன் கட்டுரைகள் பெரும் பெரும் வாணிபங்கள் நடத்தி வாழ்ந்த தமிழன் பரம்பரைக்குத் தற்போது நினைத்தவுடன் தஞ்சம்புகும் வியாபார மாகத் தலையெடுத்துள்ள தோசை சுட்டு விற்கும் வியாபாரத்தைத் தொடங்கினாள் அந்த அம்மை. அத்துடன் தேனிர்க் கடையும் வைத்தாள். அந்தக் கடை மெல்ல மெல்ல வளர்ந்தது; அதன் வளர்ச்சி சென்ற வழியே லோகநாதனின் கருத்துக்களும் வளர்ந்தன. ஆதிகாலத்தில் கைகளால் சிருஷ்டிக்கப்பட்ட 'மனித மனம்' இன்று மனிதனுக்குக் கைகளாகவும் கால்களாகவும் - ஏன், கண்க ளாகவும்கூட அமைந்து விட்டது. அதுவே திக்குத் தெரியாத இருளில் சிந்தனைச் சுடர் ஏற்றித் திசை காட்டும் கலங்கரை விளக்கமாய்த் திகழ்கிறது. அந்த மனத்தின் துணை கொண்டு லோகநாதன் சிந்தித்தார்; அவருக்குத் திசை தெரிந்துவிட்டது - ஊக்கமும் உறுதி குலையா உள்ளமும் அவருடைய கைகளாக மாறின. அவற்றால் தோசை, இட்டிலி முதலிய பலகாரங்கள் சுடவும், கடையை நடத்தவும் கற்றுக்கொண்டுவிட்டார் அவர். உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆம், மனம் இருக்கிறதே, அது மனிதனுக்கு ஆச்சரியமூட்டக்கூடிய - ஆச்சரி யம் நிறைந்த அங்கம். அந்த அங்கத்தின் திட்பமும் நுட்பமும் சேர்ந்துதான் படு செவிடராக இருந்த பிதோவன் என்ற ஜெர்மனிய ரைச் சங்கீத மேதையாக்கியது; குருடராக இருந்த ஆஸ்ட்ராவ்ஸ்கி என்ற ருஷ்யரை நாவலாசிரியராக்கியது, அதே மனம்தான் முட மான லோகநாதனையும் முன்னுக்குக் கொண்டு வந்து விட்டுவிட் ، التgسة பிள்ளையின் திறங் கண்டு பெற்றவள் வியந்தாள். 'இனி, என் மகன் பிழைத்துக் கொள்வான்' என ஆறுதல் கொண்டாள்.