பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதோ ஒரு சுயமரியாதைக்காரர்! 95 அதே சமயம் அவள் உள்ளம் மகனின் மண வாழ்க்கையை எண்ணி மகிழ்ந்தது. கன்னியம்மை என்னும் கன்னிகையின் துணையால் அந்தக் கனவும் நனவாயிற்று. அந்த ஆறுதலில், எல்லையற்றுப் பெருகிய அந்த ஆனந்தத் தில், தன் வம்சாவளியைப் பற்றிய அந்தக் கனவில் மனம் லயிக்க அவள் கண்ணை மூடிவிட்டாள். தாயை இழந்தது லோகநாதனுக்குப் பேரிடியாக இருந்தது. ஆனால் வள்ளுவருக்குக் கிடைத்த வாசுகியைப் போல, திரு லோகநாதனுக்குக் கன்னியம்மை கிடைத்திருந்தாள். தாயைப் பிரிந்த துக்கத்தை, அவளுடைய கருணை ததும்பும் கண்களால் அவர் மறந்தார்; மன நிறைவெய்தினார். 'தாய்க்குப் பின் தாரம்' என்று சொன்னவர்கள் பைத்தியக்காரர் களா, என்ன?-இந்த இருபதாம் நூற்றாண்டின் நாகரிகக் குடும் பங்களில் மூழ்கி நனைந்தவர்களுக்கு வேண்டுமானால் அந்த வாக்கியம் பிடிக்காமல் இருக்கலாம், பிடிபடாமலும் இருக்கலாம். ஆனால் 'லோகநாதன் - கன்னியம்மை' போன்ற தம்பதிகள் அந்த வாக்குக்கேற்ப இன்னமும் நடந்துகொண்டுதான் இருக்கிறார்கள், அத்தகையவர்களால் தமிழர்களின் மானமும் ஓரளவாவது இன்று வரை வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. 'என் மனைவி, என்னுடன் மனமுவந்து ஒத்துழைக்கிறாள். இதனால் யாருடைய உதவியும் இன்றியே நாங்கள் ஐந்து குழந்தை களுடன் கஷ்டமின்றிக் காலத்தைக் கழித்து வருகிறோம்' என்று கூறுகிறார் தோழர் லோகநாதன்-வாழ்க, அவர் தன்மானம்!

: : : :