பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதோ ஒரு சுயமரியாதைக்காரர் 1-4 எழுத்தாளர் கலைப்பித்தன் முதல் பிரம்மாவுக்குக் 'கண்ணாமூச்சி' என்றால் ரொம்ப ரொம்ப ஆசை, அதற்காகத்தான் வாழ்க்கையையே கண்ணாமூச்சி யாக்கி விளையாடினார், விளையாடுகிறார்! - இந்தக் கண்ணா மூச்சி விளையாட்டுக்குச் சவால்' மாதிரி ஓர் எக்காளச் சிரிப்புதன்மானச் சிரிப்பு எதிரொலித்தது, முதல் பிரம்மாவுக்கு நேர் வாரிசான இரண்டாவது பிரம்மாவிடமிருந்து படைப்புக் கடவுள் கள் இருவரும் ராஜீய முறை'யிலே கை குலுக்கிக் கொண்டார்கள், மூன்றே முக்கால் நாழிகைக்கு மேல் எந்தக் கடவுளும் பூலோகத் திலே நிலைத்து நிற்கமுடியாதல்லவா?- எனவே முதல் பிரம்மா வைப் பேட்டி கண்ட இரண்டாவது பிரம்மாவை மட்டும் இந்த இதழ் 'மனித'னில் அறிமுகப்படுத்துகிறோம் பெருமையுடன், பெருமிதத்துடன். இந்தச் சுயமரியாதைக்காரர் ஒர் அதிசய மனிதர்: கலையென்றால் இவருக்குப்பைத்தியம் வாழ்க்கையே இவருக்குக் கண்ணாமூச்சி விளையாட்டு - முதல் கடவுளின் பரம்பரை யல்லவா? பெற்றோர் இட்ட பெயர் சுந்தரராஜன், இவராகப் புனைந்து கொண்ட பெயர் 'கலைப்பித்தன்." பள்ளி நாட்கள் வாழ்க்கையின் கனவுலக இன்ப நாட்கள். அந்நாட்களிலேதான் நண்பர் கலைப்பித்தனின் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனை - கால்பந்தாட்டத்தில் திளைத்திருந்த இவருக்குக் கால்கள் சுளுக்கி'க் கொண்டன; சிறு விபத்துதான்!- ஆனால் அந்தச் சிறு விபத்தின் விளைவு பன்னிரண்டு ஆண்டுகள் 'மருத் துவ நிலையப் பறவை'யாக இவரை ஆக்கிவிட்டதே! எத்தனையோ இரண சிகிச்சை செய்தும் பயன் இல்லை; இரண்டு கால்களும் மடக்க முடியாமல் இடுப்பிற்குக் கீழே நீட்டியது நீட்டியபடியே கிடக்கின்றன. எழுந்து நிற்கவோ, நடக் கவோ முடியாது. குளிப்பதாயிருந்தாலும் சரி, வெளியில் எங்கா