பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதோ ஒரு சுயமரியாதைக்காரர் : 97 வது போவதாயிருந்தாலும் சரி, இருவர் சேர்ந்து இவரைத் தூக்கிக் கொண்டுதான் செல்ல வேண்டும்- இது கடவுள் சித்தம். 'சாவதற்குத் துணிந்தால் பேனாவை எடு!” - சூன்ய வெளி யினை வெட்டிப் பாய்ந்த இந்த எதிரொலியைக் கேட்டுச் சிரித்தார் நண்பர், பைத்தியக்காரன் ஒருவனின் அனுபவமொழியான அது, அவரைச் சிந்தனை செய்யத் துண்டவில்லை; சிரிக்கத்தான் துண்டி யது-"இரண்டு கால்களென்ன, இரண்டு கண்களும் போனால் கூட நான் கலங்கப் போவதில்லை" என்ற தன்னம்பிக்கை அந்தச் சிரிப்பிலே வெற்றி முரசு கொட்டியது. பேனாவை எடுத்தார்; கலைப்பித்தனானார். பிறவா வரம் தர மேலிடத்திற்கு மனுப் போடாமலேயே, தண்டமிழ் நாட்டிலே தமிழ்க்குரல் கொடுத்துவிட்ட இவருக்குப் பிறவிப் பயன் கிடைத்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். இல்லையென்றால் இவருக்குச் சோதனை'கள் காட்டிய தெய்வங்க ளென்ன, அரசியல் தலைவர்களென்ன, மேலை நாட்டு நல்லறிஞர்க னென்ன - இவர்களெல்லாம் கலைப்பித்தனின் பேட்டிக்கு இசை வார்களா? - பிறந்த மனையான 'கலை இல்ல'த்தில் நிறுவப்பட் டுள்ள சிறு நூல் நிலையத்திலேதான் இந்தப் பேட்டிகளெல்லாம் அன்றாடம் நடைபெற்று வருகின்றன! Tெழுத்துப் பைத்தியம் நண்பரை ஆசிரியனாகவும் ஆக்கி வேடிக்கை பார்த்துவிட்டது. ஒருவன் எண்ணியவிதமே ஆகிறான் அல்லவா? -அதற்கினங்கக் 'கலை மலர்' என்ற இலக்கிய இதழ் திரு. கலைப்பித்தனை ஆசிரியராகக் கொண்டு பெருமை பூண்டது. இவருடைய சொந்தக் குழந்தையான அதற்கு மூன்று ஆண்டுகள் தாம் ஆயுள் என்று தமிழ்நாடு சொல்லி விட்டது; எனவே மலரும் கருகிவிட்டது. படிப்பு, சிந்தனை, பயனுள்ள பேச்சு - இவை தினசரி வேலை 'சுதந்திர தீபம், மந்திரி மனைவி, தொழிலாளர் தோழன்' என்பன இவரது படைப்புகள். 来来淑来装