பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதோ ஒரு சுயமரியாதைக்காரர் !-6 தோழர் முனுசாமி சோவின் பரம்பரையில் உதித்த தோழர் முனுசாமி இம்மா தம் வாசகநேயர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றார் பெருமை யோடு பெருமிதத்தோடு பட்டனத்தில் ராயபுரத்தில் பிறந்து வளர்ந்த இவர், கடந்த பதினைந்தாண்டுகளாக மாம்பலம் வாசியாகியிருக்கிறார். அரும்பு வியர்வை உதிர்த்து புவிமேல் தொழில் செய்வோரை யெல்லாம் 'பிரம்மதேவன் கலையிங்கு நீரே!' என்று பெருமைப் படுத்துகிறார் அமரகவி. தொழிலுக்கு வந்தனை செய்வது நம் கடமை, செருப்புத் தைக்கும் சக்கிலியர் வகுப்பிற்குப் பெருமை யுண்டு முனுசாமியினால் அந்தப் பெருமையில் தன்மானமும் சுயமரியாதைப் பண்பும் குரல் கொடுக்கின்றன. இவருக்கு வலது கை பிறப்பு முதல் விளங்காது’ - வலிப்பு நோயின் விளைவு இது. இடது கை ஒன்றுதான் இவருக்குத் தோழன். வலது கை எந்நேரமும் "படபட"வென்று ஊசலாடிக்கொண்டேயிருக்கும், அதை ஒருநிலைப் படுத்தி மடக்கிக்கொண்டால் தான், இடது கை வேலை செய்ய முடியும் இந்த இடது கையினால் தான் முனுசாமி செருப்புத் தைக்கிறார். லாடம் அடிக்கிறார். பாலிஷ் பூசுகிறார். தோலைக் கத்தியால் வெட்டுகிறார். நூலை ஊசியில் இணைத்துத் தைக்கிறார். உண்மையில் இந்நிலை அவருக்க அமைந்த சோத னைக் கட்டம் தான் சேதாவுக்கு இரண்டு கைகள் இருந்தும், 'பகவானின் கருணை தேவைப்பட்டது. ஆனால் நம் முனுசாமி யின் ஒரு கையை - அதுவும் வலக்கையைப் படைத்த கடவுள் உணர்வற்றதாக்கி விட்டாலும் கூட, அதற்காக அவர் மனமொ டிந்து விடவில்லை, தன்னம்பிக்கைத் துணையை வலது கையாக் கிக் கொண்டு உழைக்கத் தலைப்பட்டார். இரண்டு கைகளும் சேர்ந்து செய்ய வேண்டிய வேலைகளை அந்த ஒரே கையினால்