பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் வாழ்க்கையில் சில துளிகள் 1916-செப்டம்பர் திங்கள் 22-ம் நாள் செங்கற்பட்டு மாவட்டத் தில் உள்ள நாவலூர் என்னும் சிற்றுரில் வேதாசலம்ஜானகியம்மாள் தம்பதிகளுக்குத் தலைமகனாகப் பிறந்தார் கோவிந்தன். உடன் பிறந்தவர் சாமிநாதன் என்கிற இளவல் ஒருவர் மட்டுமே ஆவார். 1921-சென்னை சூளை பட்டாளம் பகுதியில் உள்ள பி அண்ட் சி பஞ்சாலையின் புகழ் எவ்வளவு பெரியதோ அதைவிடப் பன்மடங்கு பெரியது அந்தப் பகுதியில் வாழும் தொழிலாளர் களின் போராட்ட உணர்வுகள்! அந்த மண் துப்பாக்கி சூடுகள், மரணங்கள் இன்னும் பிற வர்க்கப் போராட்டங்கள் நிகழ்வற்குக் களமாக அமைந்த மண். அம் மண்ணையே தமது வளரும் இடமாகவும், வாழும் இடமாகவும் கொண்டு இளமைக் கல்வியைத் துவக்கினார் கோவிந்தன். 1926-இரண்டு தலைமுறையாகப் பஞ்சாலைத் தொழிலாளிகளாக வாழ்ந்து பழகிப்போன கோவிந்தனின் முன்னோர்கள், கோவிந்தனையும் பகுதி நேரப் படிப்பு, பகுதி நேரத் தொழில் என்னும் திட்டத்தின் கீழ் பஞ்சாலையில் சேர்த்தார்கள். ஆனால், அடிநாளிலேயே அடிமைத்தனங்களைக் கண்டு ஆவேசம் கொள்ளும் போக்கு இயற்கையாக அமைந்திருந்த தால் பஞ்சாலைத் தொழிலைக் கைவிட்டார் கோவிந்தன். 1931-வசதியும் வருவாயும் ஓரளவிற்கு இருந்த போதிலும், கல்வி அறிவு இல்லாமையாலும், மூடப் பழக்க வழக்கங்களுக்கே முதல் இடம் கொடுத்ததாலும் வறுமை மிகுந்த வாழ்க்கையே தமது வாழ்க்கை என வாழ்ந்த கோவிந்தனின் பெற்றோர்கள் அவர் படிப்பில் கவனம் செலுத்தத் தவறினார்கள். எனினும், விழிப்பும் வெளிச்சமும் எதிர்கால வாழ்க்கைக்குத் தேவை