பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வித்தன் வாழ்க்கையில் சில துளிகள் 103 யென்பதை உணர்ந்த கோவிந்தன் இரவுப் பள்ளிகளில் படித்துத் தம் கல்வி அறிவை வளர்த்துக் கொண்டார்; அதனூடே ஓவியம் கற்க விரும்பி ஓவியப் பள்ளியில் சேர்ந்தார். 1936-'கருவிலே திரு'வுடைய கோவிந்தன் ஜெமினி ஸ்டுடியோ விளம்பரப்பகுதியில் ஓவியராகப் பணியாற்றிய போது, அவர் பாட்டனார் 'படைக்கும் தொழில் தரித்திரத்தின் ஊற்று! என்று கோவிந்தனின் படைப்பாற்றலை முடக்கினார். அதன் பிறகே நண்பன் இராஜாபாதர் துணையால் டாக்டர் மாசிலாமணி முதலியார் நடத்தி வந்த 'தமிழரக' என்னும் திங்கள் இதழில் அச்சுக் கோர்க்கும் தொழிலாளியாகச் சேர்ந் தார். 1939-'தமிழரசு' இதழில் பாவேந்தர் பாரதிதாசன் போன்ற் தமிழ்ப் புலவர்களும் அறிஞர்களும் தொடர்பு கொண்டிருந்தார்கள். அந்தச் சமயத்தில் தமிழ் மேல் பற்றும் எழுத்தார்வமும் கொண்டிருந்த கோவிந்தன் அவர்களோடு பழகும் வாய்ப்பி னைப் பெறாதபோதிலும் அவர்கள் எழுத்தினை அச்சுக் கோர்க்கும் வாய்ப்பினைப் பெற்றார். சான்றாக பாவேந்தர் பாரதிதாசன் புனைந்துள்ள 'தமிழுக்கு அமுதென்று பேர்' என்னும் கவிதை வரிகளை முதன் முதலாக அச்சுக் கோத்தவர் கோவிந்தன் அவர்களே! தமிழரசு' இதழை விட்டு விலகி ஆனந்த போதினி, தாருல் இஸ்லாம் போன்ற இதழ்களில் பணியாற்றி தேர்ச்சிமிக்க அச்சுக்கோப்பாளராக ஆனந்த விகடனில் சேர்ந்தார். 30-4-39 அன்று லீலாவதி என்னும் பெண்மணியை மணந்தார். 1940-தலைமகன் வரதராசன் பிறப்பு. 1941-சென்னை சூளை பட்டாளத்தில் 'ராயல் ஒட்டல்' என்னும் பெயரில் மிலிட்டரி ஓட்டல் ஒன்றை நடத்தி பெரும் நஷ்டம் அடைந்தார்.