பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'கண் திறக்குமா?' என்ற நாவலுக்கு விந்தன் எழுதியுள்ள முன்னுரை, சுதந்திரச் சிந்தனையும் சுயமரியாதையும் மிக்க ஒரு எழுத்தாளனுக்கு, வறுமையிலும், வாழ்க்கைப் போராட்டத்திலும் வாழ்ந்துகொண்டிருக்கும் படைப்பாளிக்கு அதிலும் நக்கீரனாக அவதாரம் எடுத்தவருக்கு தமது உரிமையை நிமிர்ந்து நின்று எடுத்துச்சொல்லமுடியாமல், புராணக்காலத்தில் சிவபெருமான் முன் கூனிக்குறுகி நின்ற நக்கீரன்போல், பேராசிரியர் கல்கி முன்னால் குற்றவாளிபோல் நவீனகாலத்து நக்கீரரான விந்தன் நின்ற காட்சியும் அதை விவரிக்கும் விந்தனின் மனநிலையும் மிகவும் வேதனையானது. எனினும், பேராசிரியர் கல்கி அந்த இடத்தில் காட்டிய அன்பும் ஆதரவும் மனிதநேயமிக்கது. அப்பொழுது அவர் கொடுத்த தூண்டுதலில் எழுதப்பட்டதே 'பாலும் பாவையும் நாவல் கடைசி காலத்தில் 'சுயம்வரம்' என்ற நாவலுக்கு எழுதியுள்ள முன்னுரையில் விந்தன் தமக்குப் பரிசும் பாராட்டும் கிடைக்கவில்லையே என்று ஆதங்கப்படுவதும், சினிமா மயக்கத்தில் இலக்கியப் பணிகளையும், இலக்கிய நண்பர்களையும் இழக்க நேர்ந்தது மிகப்பெரிய பேரிழப்பு என்று வருந்துவதும், எழுத்தில் காட்டிய கவர்ச்சியை நிசவாழ்க்கையில் காட்டமுடியாததற்காகக் கவலைப் படுவதும் ஒரு சுதந்திர எழுத்தாளனுக்கு வணிகமயமாய் போய்விட்ட இலக்கிய உலகம் உண்டாக்கிய பெரிய சோதனையாகும். 'சரவிளக்கு முன்னுரை இளம் எழுத்தாளர்களுக்கு நல்ல எச்சரிக்கை. அதிலும் எழுத்து ஒன்றை மட்டுமே நம்பி வாழநினைக்கும் இளைஞர்களுக்கு எழுத்துலகம் மாயமான் போன்றது வெளியே இருப்பவர்கள் உள்ளே போக xii