பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 விந்தன் கட்டுரைகள் 1942-இராஜாபாதர் உதவியால் 'கல்கி' அச்சகத்தில் அச்சுக்கோப் பவராகச் சேர்ந்தார். இந்த ஆண்டில் தான் வி.ஜி. என்னும் பெயரில் 'கல்கி' இதழில் பாப்பா மலர் பகுதிக்குக் கதைகள் எழுத ஆரம்பித்தார். 1943-பேராசிரியர் கல்கி அவர்களால் 'விந்தன்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு எழுதிய முதல் சிறுகதை 'முல்லைக் கொடியாள்' இதே ஆண்டில் 'கல்கி' இதழின் ஆசிரியர் குழுவில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். 1944-பாட்டினார், தந்தையார் ஆகியோர் இரு தாரங்களை மணந்தது போலவே விந்தனும் சரசுவதி அம்மையாரை 13-7-44 அன்று மனந்தார். 1946-விந்தன் எழுதிய 'முல்லைக் கொடியாள்' என்னும் சிறுகதைத் தொகுப்பிற்கு தமிழ் வளர்ச்சிக் கழகம் முதற்பரிசு வழங்கிப் பாராட்டியது; கழகம் முதன் முதலாக அளிக்க முன்வந்த பரிசைப் பெற்ற முதல் எழுத்தாளர் விந்தன் அவர்களே ஆவார்! 1947-இல் 'வேலை நிறுத்தம் ஏன்?' என்ற சிறுநூலை எழுதி வெளியிட்டார். 1948-அண்மையில் இயற்கை எய்திய முற்போக்காளர் முருகு சுப்பிரமணியம் நடத்திய 'பொன்னி திங்கள் இதழில் கண் திறக்குமா? என்னும் தொடர்கதையை நக்கீரன் என்கிற பெய ரில் எழுதினார், விந்தன் எழுதிய முதல் தொடர்கதை-நாவல் இதுவேயாகும். 1950-கண் திறக்குமா? கதையை எழுதிப் பலரின் பார்வைக்கும்-பாதிப்புக்கும் ஆளான விந்தன், பேராசிரியர் கல்கியின் விருப்பத்திற்கு ஏற்றவாறு 'பாறும் பாவையும்' என்னும் தொடர்கதையை கல்கி இதழில் எழுதினார்.