பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் வாழ்க்கையில் சில துளிகள் ið5 1951-'கல்கி' இதழை விட்டுவிலகி ஏவிஎம்' கதை இலாகாவில் சேர்ந்தார். "ஒரே உரிமை' என்னும் சிறுகதைத் தொகுப்பு டாக்டர் மு.வ. முன்னுரையுடன் வெளிவந்தது. 1953-"சமுதாய விரோதி' என்னும் சிறுகதைத் தொகுப்பு கி. சந்திரசேகரன் முன்னுரையுடன் வெளிவந்தது. விந்தன் தில்ரைக் கதை-வசனம் எழுதி வெளிவந்த முதல் திரைப்படம் 'வாழப் பிறந்தவள்’. 1954-ஆகஸ்ட் திங்கள் 15ம் நாள் 'மனிதன் மாத இதழை வெளியிட்டார், விலை நாலனா. இவ்விதழ் பத்து இதழ்கள் மட்டுமே வெளிவந்தது. 1956-புதுமைப் பிரசுரம் வீ. இராமசாமி விரும்பியபடி பெண்ணா டிம் எனும் கிராமத்தில் தங்கி "பசிகோவிந்தும் என்கிற புடை நூலை எழுதினார். 1957-'அமுதசுரபி' மாத இதழில் 'அன்பு அலறுகிறது' என்னும் பெயரில் தொடர்கதை எழுதினார். இக்கதை தன்னுடைய 'சினேகிதி' நாவலைத் தழுவியிருப்பதாக - விமர்சனம் செய் வதாக எழுத்தாளர் அகிலன் விந்தன் பேரில் வழக்குத் தொடுத்தார். 1959- புத்தகப் பூங்கா' என்கிற பெயரில் பதிப்பகத்தை ஆரம் பித்து தோழர் ஜெயகாந்தனின் ஒருபிடி சோவ' என்னும் சிறுகதைத் தொகுப்பின் இரண்டாம் பதிப்பை வெளிக் கொணர்ந்தார். 1960- அமுதசுரபி' இதழில் 'மனிதன் மாறவில்லை என்னும் தொடர்கதையை எழுதினார். இதே ஆண்டில் சொந்தமாகத் திரைப்படம் தயாரிக்க எண்ணி சிலருடன் கூட்டுச்சேர்ந்து 'மல்லிகா புரொடக்ஷன்' என்னும் பெயரில் திரைப்படக் கம்பெனியைத் துவக்கினார். 1961-"கனவிலே வந்த கன்னி' என்னும் தலைப்பில் இராணி வார இதழில் தொடர்கதை எழுதினார். இக்கதையே பின்னால் "காதறும் கல்யாணமும்' என்ற பெயரில் நூலாக வெளிவந்த போது க.நா.சு. முன்னுரை எழுதினார்.