பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுப்பை சிறப்பான முறையில் வெளியிட்டிருக்கிறார். அவருக்கு என் மனப்பூர்வமான நன்றியை, பாராட்டை வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் இக்கட்டுரைத் தொகுப்பு சிறப்பான முறையில் உருவாவதற்கு டாக்டர் தயா அவர்கட்கு துணைபுரிந்த பதிப்பாசிரியர் சகோதரி ஸ்விட்லின் பிரபாகரன், எம்.ஏ. அவர்கட்கும், சி.எல். எஸ். அச்சகத் தொழிலாளத் தோழர்கட்கும், கட்டுரைகளைத் திரட்டுவதில் எனக்குப் பெரிதும் உதவியவரும், தமது தந்தையாரின் படைப்புகள் அனைத்தையும் வெளியிடுவதில் நேரும் சிரமங்களைப் பாராமல் அக்கறையும் ஆர்வமும் காட்டிவரும் விந்தனின் புதல்வர் தம்பி சூர்யமூர்த்திக்கும் மற்றும், சில கட்டுரைகளைக் கொடுத்துதவிய பேராசிரியர் தி.வ. மெய்கண்டார் பத்திரிகையாசிரியர்கள் அனைவருக்கும் என் மனப்பூர்வமான நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். தோழமையுள்ள, மு. பரமசிவம் Głogótandst- 78 xiv