பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதி வாழ்ந்த பாண்டி துரியோதனன், துச்சாதனன் ஆகியோரை எதிர்த்துப் பாரதப் போர் நடத்தினார்கள் அர்ச்சுனன், வீமன் ஆகியோர் அதே பாரதப் போரைப் பிரெஞ்சுக்காரனையும் பிரிட்டிஷ்காரனையும் எதிர்த்து நடத்தினான் பாரதி எங்கே தனக்குப் புகலிடம் தந்து உயர்ந்த புதுவையில் அந்தப் போரில் தன்னையே அர்ச்சுனனாகப் பாவித்துக் கொண்ட பாரதி, ரிக்ஷாக்காரனைப் பார்த்தனாக்கினான், அவன் இழுக்கும் ரிக்ஷாவை ரதமாக்கினான் அந்த ரதத்தில் முறுக்கிவிட்ட மீசையுடன் ஏறி அமர்ந்த பாரதி, 'பார்த்தா, ஒட்டடா ரதத்தை' என்றான் ரதம் அசல் ரதத்தைப் போலவே கடகடவென்று ஒலித்துக் கொண்டே ஓடிற்று காரணம் வேறொன்றுமில்லை, அப்போது ரிக்ஷா சக்கரங்களில் ரப்பர் டயர் பொருத்தப்படாமல் இருந்தது தான் ரதம் எங்கே ஒடிற்று -குருட்சேத்திரத்தில் ஓடவில்லை, பாண்டி வீதிகளிலே ஒடிற்று அதனாலென்ன, அதையே போர்க்கள மாகக் கொண்டுவிட்டான் பாரதி 'வில்லினை எடடா, வில்லினை எடடா - அந்தப் புல்லியர் கூட்டத்தைப் பூழ்தி செய்திடடா' பாடியவன் பார்த்தனான ரிக்ஷாக்காரன் அல்ல-அவன் எப்படிப் பாடுவான்? தன்னையே பார்த்தனாகவும் பாவித்துக்கொண்டு பார தியே பாடினான் ஆனால் அவன் கையில் அப்போது வில்லும் இல்லை, அம்பும் இல்லை, இருந்தவை பேப்பரும் பேனாவுமே