பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 விந்தன் கட்டுரைகள் அவற்றை வைத்துக் கொண்டு அவன் நடத்திய பாரதப்போர் ஜனப் பிரசித்தம், சரித்திரப் பிரசித்தம், ஜகத் பிரசித்தம் அத்தகைய மாவீரனுக்கு, மா கவிஞனுக்குப் படை திரட்டிக் இகாடுத்த பாண்டியிலே நான் கால் எடுத்து வைக்கிறேன் என் உடம்பெல்லாம் புல்லரிக்கிறது, ஆறி அடங்கக்கூடிய நிலைக்கு வந்துவிட்ட என் ரத்தத்தில் சூடேறுகிறது, அங்கங்கே நரை தட்டிப் போன ரோமங்கள் கூடக் குத்திட்டு நிற்கின்றன தாழ்ந்த தலை நிமிர்கிறது, ஒடுங்கிப்போன கண்கள் ஒளி வீசுகின்றன, மீசை துடிப்பதற்குப் பதிலாக அதை எடுத்துவிட்ட மேலுதடுகள் துடிக் கின்றன, கூன் விழுந்து போன முதுகு பின்னால் சரிந்து, மார்பை முன்னால் தள்ளி வைக்கிறது, கை வீச்சில் ஒரு கம்பீரம், நடையில் ஒரு மிடுக்கு-ஆகா, இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் பாரதி நினைவில் இப்படி ஒரு உத்வேகமா கடற்கரைச் சாலை வழியே ஏறுநடை போடுகிறேன் இந்திய விடுதலைக்காக வெளிநாட்டினரின் உதவி கோரிக் கடல் கடந்து சென்ற வங்க வீரன் சுபாஷ் சந்திரபோஸுக்கு முன்னால், அதே உதவிக்காகப் புதுவையிலிருந்து கடல் கடந்து சென்ற தமிழ் வீரன், பாரதியின் தோழன் மாடசாமியின் நினைவு வருகிறது 'போனவன் போனவன்தான், அங்கிருந்து திரும்பவேயில்லை' என்பதை நினைத்ததும் என் கண்கள் கலங்குகின்றன துடைத்துக்கொண்டு மேலே நடக்கிறேன் மணக்குட விநாயகர் கோயில் கண்ணில் படுகிறது 'வாழ்க புதுவை மணக்குடத்து வள்ளல் பாதமணி மலரே' என்ற பாரதி யின் பாடலாலேயே அவரை வழிபட்டுவிட்டு, ஈசுவரன் கோயில் வீதியின் பக்கம் திரும்புகிறேன் 'அன்றொருநாள் புதுவை நகர்தனிலே கீர்த்தி அடைக்கலஞ்சேர் ஈசுவரன் தர்மராஜா என்றபெயர் வீதியிலோர் சிறிய வீட்டில், , , '