பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதி வாழ்ந்த பாண்டி 3 என்று தான் இருந்த வீட்டைப் பற்றிப் பாரதி பாடினானல்லவா?அந்த வீட்டைப் பார்க்கிறேன் 'பாரதி இருந்தான் என்ற பெருமை யைத் தவிர வேறொரு பெருமையும் எனக்கு ഒങ്ങജ" என்பது போல் அது இப்போது பாழடைந்து கிடக்கிறது. தற்போது பாண்டிச்சேரி முதலமைச்சராயிருக்கும் திரு பரூக் அரசாங்கச் செலவில் அந்த வீட்டை வாங்கி, அதில் பாரதியின் ஞாபகார்த்த மாக ஏதாவது செய்யவேண்டும் என்று முயன்று வருகிறார் அவருடைய முயற்சி வெற்றியடையவேண்டுமானால் மத்திய சர்க்கார் கண் திறக்க வேண்டும் கலைஞர் கருணாநிதி தற்போது எட்டயபுரத்திலுள்ள பாரதி பிறந்த வீட்டையும், கடையத்திலுள்ள 'காணி நிலம் வேண்டும் பராசக்தி, காணி நிலம் வேண்டும்' என்று பாரதி பாடிய இடத்தையும் வாங்கிக் 'கவினுறு மாளிகை கட்டிக் கவிஞரின் கனவை நனவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் அவற்றுடன் அவர் இதையும் சேர்த்துக்கொண்டு பருக்குடன் ஒத்துழைத்தால் வெற்றி நிச்சயம் அவசியம் ஒத்துழைப்பார் என்றும் நம்பலாம் அங்கிருந்து வைசியர் விதிக்கு வருகிறேன் இங்கேதான் பாரதியின் பாசறையாக விளங்கிய கல்வே சங்கரச் செட்டியாரின் வீடு இருக்கிறது திரு வ வே சு அய்யர், வழக்கறிஞர் துரைசாமி அய்யர், புரட்சி வீரர் மாடசாமி, திரு சுப்பிரமணிய சிவா, திரு வாஞ்சி, திரு நாகசாமி போன்றோர் இந்த வீட்டில்தான் அடிக்கடி கூடி, வெள்ளையனை இந்தியாவிலிருந்து விரட்டுவ தற்கு வேண்டிய வழிவகைகளைப் பற்றி யோசிப்பார்களாம் அதன் விளைவுகளில் ஒன்றுதான் ஆங்கிலேயக் கலெக்டரான ஆஷ் துரையை மணியாச்சியில் வாஞ்சி சுட்டுக் கொன்றதாம் இந்த நிகழ்ச்சியைப் பற்றி இப்போதும் ஜீவியவந்தரா யிருக்கும் திரு. நாகசாமி அய்யர்தான் எவ்வளவு உற்சாகமாகப் பேசுகிறார்: அவருடைய இருப்பிடத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்டு போய் அவரைச் சந்திக்கிறேன்.