பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. விந்தன் கட்டுரைகள் அய்யருக்கு வயது இப்போது எண்பத்துமூன்று, எப்போ தும் படுக்கையை விரித்து வைத்துக்கொண்டு படுத்த படுக்கையா யிருக்கிறார் நான் அருகில் சென்று உட்கார்ந்து அவரைத் தொட்டு உசுப்பி, 'ஐயா, ஐயா!' என்கிறேன் 'யார் அது?' என்று கேட்டுக்கொண்டே திரும்புகிறார் 'நான் ஒரு பத்திரிகையாளன், பாரதியைப் பற்றி உங்களு டன் சிறிது நேரம் பேசவேண்டும் அவ்வளவுதான், இருபது வயது இளைஞனைப் போல அவர் துள்ளி எழுந்து உட்காருகிறார் 'பாரதியை ஆசிரியராகக் கொண்டு சென்னையில் நடந்து வந்த 'இந்தியா’ பத்திரிகை அங்கே பிரிட்டிஷ் அடக்குமுறைக்கு ஆளாகிப் பாண்டிச்சேரிக்கு வந்தது அதற்கு முன்னாலேயே பாரதி இங்கே வந்து விட்டார் 'இந்தியா’ பத்திரிகையிலே நான் அவருக்குத் துணையாசிரியராயி ருந்தேன்' என்று ஏக உற்சாகமாகப் பேச ஆரம்பிக்கிறார் 'அப்புறம்?' என்கிறேன் நான் 'பகலில் பத்திரிகை வேலை, இரவில் வெள்ளைக்காரனை எப்படி ஒழிக்கிறது, அதற்கு மக்களை எப்படித் தயார் செய்கிறது என்கிறதைப் பற்றி யோசிக்கிற வேலை 'அந்த வேலையில் ஒன்றுதான் ஆஷ் துரையைச் சுட்டதாக் கும்? ஆமாம் அவனைச் சுட்ட அந்த வாஞ்சிக்கு நான்தான் குறி பார்த்துச் சுடக் கற்றுக் கொடுத்தேன் 'உங்களுக்குத் துப்பாக்கி ஏது?' 'பாரிஸிலே எங்களை ஆதரிக்கிற சீமாட்டி ஒருத்தி இருந் தாள் அவளுக்கு எழுதி வரவழைத்தோம்