பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதி வாழ்ந்த பாண்டி 5 'நீங்கள் எதைக் குறி பார்த்துச் சுடக் கற்றுக் கொடுத்தீர்கள்? காக்கை, குருவிகளைப் பார்த்தா?” காக்கை குருவி எங்கள் ஜாதி, நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் என்று பாடும் பாரதியின் தோழர்களாச்சே நாங்கள், அப்படிச் செய்வோமா? கீழே இருந்து தென்னை மரத்தில் இருக்கிற தேங்காய் குலையைக் குறி பார்த்துச் சுடக் கற்றுக் கொடுத்தேன் 'கடைசியில் என்ன ஆயிற்று' 'போட்ட திட்டப்படி வாஞ்சி ஆஷைச் சுட்டுவிட்டுத் தன்னை யும் சுட்டுக்கொண்டான் ஆனால் 'என்ன ஆனால்' 'எவ்வளவோ சொல்லியும் அவன் ஒரு தவறு செய்துவிட் டான் என்ன தவறு? 'நம்முடைய கடிதப் போக்குவரத்து எதையும் பாக்கெட்டில் வைக்காதேடா, பாக்கெட்டில் வைக்காதேடா என்று நான் படித்துப் படித்துச் சொன்னேன் அதைக் கவனிக்காமல் அவற்றில் சிலவற் றைப் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு அவன் தன்னை சுட்டுக் கொண்டிருக்கிறான் அது போலீஸாரிடம் சிக்கிக்கொண்டு விட் டது அவர்கள் எங்களைக் கண்காணிக்க ஆரம்பித்துவிட்டார்கள் அந்தச் சமயம் பார்த்து அரவிந்தரும் வங்கத்தில் ஏதோ தப்புத் தண்டா செய்துவிட்டு வந்து எங்களுடன் சேர்ந்தார் போலிஸ் கெடுபிடி இன்னும் அதிகமாயிற்று அவர்கள் எங்களைக் கண்கா ணிப்பது போலவே நாங்களும் அவர்களைக் கண்காணிக்க ஆரம் பித்தோம் அதற்கு உதவியாகச் சங்கரச் செட்டியார் மாடியின் நடுவேயிருந்து பார்த்தால் கீழேயுள்ள தரை வரை தெரியும்படியாக ஒரு ஜன்னல் அமைத்துக் கொடுத்தார் எங்களில் ஒருவன் மாடிக்குப் போய், அங்குள்ள ஜன்னலுக்கும் கைப்பிடிச் சுவருக்குமாக நடை போட்டுக் கொண்டிருப்பான் ஒற்றர்கள் யாராவது வந்தால்