பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதி வாழ்ந்த பாண்டி 7 மறதி வேறு அடிக்கடி வந்து அவருடைய பேச்சுக்கு முட்டுக் கட்டை போடுகிறது அந்த நிலையில் அதற்குமேல் அவரைச் சிரமப் படுத்த விரும்பாமல் நான் அவரிடமிருந்து விடைபெறுகி றேன் 'இது என்ன உற்சாகம்? காலை நேரத்தில் வந்திருந்தால் இன்னும் உற்சாகமாகப் பேசியிருப்பார்' என்று சொல்லிக் கொண்டே அவருக்குத் தற்போது அடைக்கலம் தந்திருக்கும் வீட்டுக்காரர் என்னை நோக்கி வருகிறார் அவரைப் பார்த்தால் எனக்குப் பிராமணராகத் தோன்ற வில்லை 'உங்களுக்கு இவர் என்ன வேண்டும்?' என்று என் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்வதற்காகக் கேட்கிறேன் 'ஒன்றுமில்லை நானும் மனிதன் அவரும் மனிதன் அவ்வளவுதான் எங்களுக்குள்ள உறவு' என்கிறார் அவர் & 'உங்கள் தொழில்?’’ 'கள்ளுக்கடையில் குமாஸ்தாவாக இருக்கிறேன. : { } { குடும்பத்தில் பத்துப் பேர் இருக்கிறோம் இவ ை ஆளாகச் சேர்த்துக் கொண்டிருக்கிறோம் 'ஏன் இவருக்குச் சொந்தக்காரர்கள் யாரும் இல்லையா?” 'இருக்கிறார்கள் இவருடைய பழக்க வழக்கங்கள் அவர் களுக்குப் பிடிப்பதில்லை, அவர்களுடைய பழக்க வழக்கங்கள் இவருக்குப் பிடிப்பதில்லை. அதனால் அவர்கள் இவரை ஒதுக்கி விட்டார்கள் இத்தனைக்கும் அரவிந்தாசிரமத்திலிருந்து இவருக்கு மாதம் ஐம்பது ருபாய் உதவித் தொகையாக வந்து கொண்டிருக்கிறது ' 'உங்களுடைய பழக்க வழக்கங்களெல்லாம் இவருக்குப் பிடிக்கிறதா'