பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 0 விந்தன் கட்டுரைகள் 'சித்தாந்தசுவாமி திருக்கோயில் வாயிலில் தீபவொளியுண்டாம்-பெண்னே, தீபவொளியுண்டாம்! முத்தாந்தவிதி முழுதையுங் காட்டிட மூண்ட திருச்சுடராம்-பெண்ணே, மூண்ட திச்சுடராம்.' என்று பாடியிருக்கிறார் அல்லவா? அதை நினைவுகூர்ந்து மேலே செல்கிறேன் கருவடிக் குப்பத்திலுள்ள ஆரோக்கியசாமி முதலியார் மாளிகையும், அதைச் சுற்றியுள்ள மாஞ்சோலைகளும் என் கண் னையும் கருத்தையும் ஒருங்கே கவருகின்றன பாரதி அடிக்கடி வந்து உலாவிய அந்த இடத்திலே நானும் சிறிது நேரம் உலாவி மகிழ்கிறேன் குக்கூ, குக்கூ! பாரதியின் 'குயில் பாட்டு பிறந்த இடமல்லவா?-குயில் கூவுகிறது! அழகு கொஞ்சும் இந்த இடத்தை, 'வேகத் திரைகளினால் வேதப் பொருள் பாடி வந்து தவழும் வளஞ்சார் கரையுடைய செந்தழிழ்த் தென்புதுவை யென்னும் திருநகரின் மேற்கே. சிறுதொலைவில் மேலமொரு மாஞ்சோலை நாற்கோணத்துள்ள பல நத்தத்து வேடர்களும் வந்து பறவை சுட வாய்ந்த பெருஞ்சோலை' என்று எவ்வளவு அருமையாய்க் குறிப்பிடுகிறான் பாரதி: இத்தனை இடங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு, கடைசியாக பாரதி சரண் புகுந்த முத்துமாரியம்மனைப் பார்க்காமல் வந்துவிட லாமா?-அவளையும் பார்க்கிறேன்