பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதிதாசனின் குடும்ப விளக்கு 'நீங்க ஏன் ஒரு மாதிரியா நடந்துக்கணும்' 'வீட்டிலே இருந்த வறுமைதான் அந்த வறுமையிலும் நாங்க வர்றவங்களை வரவேத்து உபசரிச்சி வளர்த்தோம் அதனாலே நானும் என் பிள்ளைகளும் அடைஞ்ச தொல்லை கொஞ்ச நஞ்ச மில்லே வந்தவங்களுக்கு இருந்த சாப்பாட்டைப் போட்டுட்டு நாங்க பட்டினியாப் படுத்துகிட்ட நாளும் உண்டு '

  • { 2 -

கவிஞரின் கடைசி காலத்தைப் பற்றி . 'அந்தக் கதையை ஏன் கேட்கறிங்க மெட்ராசிலே பாரதியார் கதையையும், பாண்டியன் பரிசையும் படமாக்க அவரு கம்பெனி ஆரம்பிச்சாரு ஏறக்குறைய அறுபது நாளு ராவாப் பகலா உட் கார்ந்து எழுதி முடிச்சாரு அதனாலே மார்வலிகூட வந்துட்டுது. அந்த வலியிலேயும் எடுத்த காரியத்தை நிறைவேத்த படாத பாடு பட்டாரு யாரும் அவரைக் கவனிக்கவும் இல்லே, கை கொடுக்க வும் இல்லே அதுக்குள்ளே மார்வலியும் அதிகமாப் போச்சு ஆஸ்பத்திரியிலே சேர்த்தோம் அங்கேயே காலமாயிட்டாரு." காலமான பிறகாவது யாராவது கவனித்தார்களா?'

'ஊஹாம் அவர் எடுத்த காரியம் எதிலேயும் தோல்வி அடைஞ்சதில்லே அதுதான் அவரு அடைஞ்ச மொதல் தோல்வி அதாலே ரொம்ப வருத்தப்பட்டாரு அந்த முயற்சியிலே எங்க ளுக்கு ஏற்பட்ட கடனிலேயிருந்து மீள முடியாம இப்போதும் நாங்க தவிக்கிறோம் அதுக்காக அவரு சிங்கப்பூருக்கும் சிலோனுக் கும் போக இருந்தாரு அது நிறைவேறலே எங்களுடைய ஒரே மகன் மன்னர்மன்னன் மேலே அவருக்கு உயிரு அவன் இப்போ புதுச்சேரி ரேடியோ ஸ்டேஷன்லே எழுத்தாளனா வேலை செய்ய றான் அவனாவது அவங்க அப்பாவுடைய கடைசிக்காலத் திட்டங் - to களை நிறைவேத்தி வைப்பான்னு நம்பிகிட்டிருக்கேன் - தினமணி கதிர்