பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒப்பற்ற கவி அசூயை, பொறாமை ஆகிய நீச்சத்தனமான உணர்ச்சி களுக்கு இடங்கொடாமல் மாசற்ற இதயத்துடன் நோக்கு பவர்க்குக் கவிஞர் பாரதிதாசன் ஓர் ஒப்பற்ற கவி என்பது புலப்படும் அவருக்கு உவமை சொல்ல இறந்த காலத்திலும் சரி, நிகழ் காலத்திலும் சரி-எந்தக் கவிஞனும் இல்லை கல்லைக் கனியவைக்கும் சிற்பி அவர் ஆகவே கொத்தனார் வேலையை அவருடைய கவிதைகளில் காணமுடியாது தாம் வாழ்வதற்காகப் பரந்த மனம் என்று சொல்லிக்கொண்டு பக்கத்தில் இருப்பவனை மறந்துவிடும் பாதகத்தை அவர் செய்ய வேண்டுமா? மதத்தின்பேரால், கடவுளின்பேரால் மக்கள் வஞ்சிக் கப்படுவதை, வதைக்கப்படுவதை அவர் பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா? பணக்காரர்கள் தம்மைப் பாராட்டவேண்டும் என்ப தற்காகப் பாமரர்களை அவர்களுக்குப் பலிகொடுக்க வேண்டுமா? அப்படியானால் கவிஞர் பாரதிதாசனை நீங்கள் வாழவைக்க வேண்டாம்; அவரை வாழவைப்பதற்கு அவருடைய கவிதைகளே போதும் ... தனித்து இயங்கமுடியாத கவிஞனுக்குத்தானே தாளம் போட ஆள் தேவை? -பாரதிதாசனின் பொன்விழா மலர் பொன்னி 1951 }{}{ }} }: };