பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகத்துக்கு ஒருவர்! ஆம்-ஆசிரியர் 'கல்கி' அவர்கள் தமிழுக்கு ஒருவர் அல்ல, தமிழ் நாட்டுக்கும் ஒருவர் அல்ல, உலகத்துக்கே ஒருவர்உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை! திறமையோடு மொழியின் துணையும் கொண்டு உலகப் புகழ்பெற்ற கீட்ஸ்ாலும் வோர்ட்ஸ் வொர்த்தாலும் கவிதைத் துறையில்தான் சிறந்தவர்களாக விளங்க முடிந்தது, ஷேக்ஸ்பியரா லும் இப்ஸனாலும் நாடகத் துறையில்தான் சிறந்தவர்களாக விளங்க முடிந்தது, விக்டர் ஹியூகோவாலும் டிக்கன்ஸாலும் நாவல் துறையில்தான் சிறந்தவர்களாக விளங்க முடிந்தது, செகா வாலும் மாப்பலானாலும் சிறுகதைத் துறையில்தான் சிறந்தவர்க ளாக விளங்க முடிந்தது, ஆனால் ஆசிரியர் அவர்களோ எல்லாத் துறைகளிலுமே சிறந்து விளங்கினார்கள், ஒப்பாரும் மிக்காரும் இல்லாத பெருமைக்கு ஆளாகி, அதே சமயத்தில் பலருடைய பொறாமைக்கும் உள்ளானார்கள் ஆசிரியர் அவர்களின் தகனக்கிரியையின் போது திரு ம பொ சி பேசும்போது, 'கல்கியின் மறைவு தமிழ்த்தாய் தன் கையிலிருந்த வினையை வீசி எறிந்துவிட்டதுபோலிருக் கிறது' என்று குறிப்பிட்டார் ஆனால் அவளுக்கு முந்தியே தமிழ்நாட்டு எழுத்தாளர்கள், பலர் தங்கள் கையிலிருந்த பேனா வைக் கண்ணை மூடிக்கொண்டு வீசி எறிந்து விட்டுக் கருத்துக் குருடர்களாக ஆகிவிட்டார்கள் அருமையும் பெருமையும் உயிரும் ஊக்கமும் மிக்க அந்த பேனாதான் ஆசிரியர் 'கல்கி' அவர்கள் எமனாவது ஒரே மூச்சில் அதை ஒடித்துப் போட்டுவிட்டான் சகோதர எழுத்தாளர்களோ அணுஅனுவாக அதைச் சிதைக்கப் பார்த்தார்கள், வதைக்கப் பார்த்தார்கள்