பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகத்துக்கு ஒருவர்! 17 அவர்கள் சிதைக்கச் சிதைக்க அது வளர்ந்தது, வதைக்க வதைக்க அது வானளாவ உயர்ந்தது. ஆனால் தனக்காக மட்டும் அதன் குரல் ஒலிக்கவில்லை; தன்னைச் சிதைப்பவர்களுக்காகவும் வதைப்பவர்களுக்காகவுங் கூட ஒலித்தது. 'இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்தான நன்னயஞ் செய்து விடல்' என்பது வள்ளுவர் வாக்கு, அந்த வாக்கைப் பிரதிபலிக்கும் உருவம் ஏதாவது ஒன்று நம் காலத்தில் இருந்திருக்குமானால், நாம் அதைப் பார்த்திருப்போமானால், அது ஆசிரியர் 'கல்கி' அவர்களின் உருவமாய்த்தான் இருந்திருக்க வேண்டும். இத்தகைய அபூர்வ மேதையைக் குறுகிய மனப்பான்மை யின்றித் தக்க முறையில் பயன்படுத்திக் கொண்டிருந்தால், தமிழ் நாட்டு எழுத்தாளர்களில் பலர் இன்று தலைகுனிந்து நடக்கவேண் டிய நிலை இருந்திருக்காது; தலை நிமிர்ந்தே நடந்திருக்கலாம்'சர்வ வல்லமையுள்ள பனம்' ஆசிரியர் அவர்களிடம் சரணாகதி அடைந்ததுபோல நம்மிடமும் சரணாகதி அடைந்திருக்கும். ஆனால் உயிருடன் இருந்தபோதுதான் அவர்களைப் பாராட்ட நமக்குத் தெரியவில்லையே! தெரிந்தாலும் மனம் இல்லையே! t இவக புகழ் பெறுவதிலேயே எப்பொழுதும் கண்றுங் கருத்துமாயிருக்கும் கூட்டம் ஒன்று தமிழ்நாட்டில் உண்டு. அந்தக் கூட்டத்துக்கு யாரும் எதற்கும் அழைப்பு அனுப்ப வேண்டிய தில்லை-தானாகவே வரும் தானாகவே துதி பாடும் தானாகவே ஒய்ந்து தன்னை யாராவது திரும்பிப் பார்க்கிறார்களா என்று கவனிக்கும்-யாரும் கவளிக்காவிட்டால் தன்னைத் தானே கவ ளித்துக்கொண்டு நிருப்தி அடையும். அன்பர்களின் அனுதாபத்தோடு, 'அந்தத் திருக்கூட்டற்றின் அனுதாப'த்துக்கும் ஆசிரியர் 'கல்கி' அவர்கள் இன்று உள்ளாகி