பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகையிலையும் புதுமைப்பித்தனும் புதுமைப்பித்தன் நினைவு நாள்! செங்கும் ஒரே குதூகலம், கொண்டாட்டம் ஏன்?-அவர் செத்துப் போனதற்காக! ஆம்; அவர் அமரரானாரென்றோ, சிரஞ்சீவியானாரென்றோ, புதுமைப்பித்தன் பாஷையில் பம்மாத்து செய்ய நான் விரும்ப வில்லை; அவர் செத்துத்தான் போனார்; அதற்காகத்தான் இந்தக் கொண்டாட்டம்: பிரசித்தி பெற்ற தமிழர்களின் பண்பாட்டில் இன்று ஏற்பட்டி ருக்கும் ஒரு பெரிய மாறுதல் இது. அதாவது, மறுமலர்ச்சி! புதுமைப்பித்தன் இலக்கியத்தில் மறுமலர்ச்சியைத் தோற்று வித்தாரென்றால், தமிழர்கள் தங்களுடைய பண்பாட்டிலே மறுமலர்ச்சியைத் தோற்றுவித்திருக்கிறார்கள்! போகட்டும்; மனிதன் உயிரோடிருக்கும்போது சந்தோஷப்பு டாவிட்டாலும் செத்துப்போன பிறகாவது சந்தோடிப்படுகிறார் களே, அவர்கள் நீடுழி வாழட்டும் அவர்களுடைய சந்தோஷம் என்றும் குன்றாமல் இருக்கட்டும்! உலகத்தில் மனிதன் இறப்பதற்கு எத்தனையோ வழிகளைக் கையாளுகிறான். விஷம் குடிப்பது -வெந்தழலில் தீய்வதுகுளத்தில் வீழ்வது - கோபுரத்தின் உச்சியிலிருந்து கீழே குதிப்பது துக்குப் போட்டுக்கொள்வது -நாக்கைப் பிடுங்கிக் கொள்வதுதத்தியின் துணையை நாடுவது- காரிலோ, ரயிலிலோ மாட்டிக் கொள்வது - இப்படி எத்தனையோ வழிகள்,