பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகையிலையும் புதுமைப்பித்தனும் 21 ருந்தால் எவ்வளவோ நன்றாயிருந்திருக்கும். இன்னும் கொஞ்சம் முன்னாடியே அவர் தம் துன்பத்திலிருந்து, துயரத்திலிருந்து, கஷ்டத்திலிருந்து, காசத்திலிருந்து ஏன், இந்தப் பாழாய்ப்போன உலகத்திலிருந்தே விடுதலையடைந்திருக்கலாம். தமிழர்களும் இன்னும் கொஞ்சம் முன்னாடியே அவருக்காகச் சந்தோஷப்பட்டி ருப்பார்கள் 'நினைவு நாள்' கொண்டாடியிருப்பார்கள். இன்று நேற்றல்ல; என்றுமே எழுத்தாளன் பிழைப்பு, இருந்த போது திண்டாட்டமாயிருந்திருக்கிறது, இல்லாத போது கொண் டாட்டமாயிருந்திருக்கிறது. உதாரணமாக, காலங்கடந்த கதையான அரபு கதையில் ஒரு கதாநாயகன் வருகிறான். பல கஷ்ட நஷ்டங்களுக்கு உள்ளான பிறகு, அவ்ன் கடைசியாக ஒரு தையற்காரனைச் சந்திக்கிறான். அந்தத் தையற்காரன், 'பிழைப்பை நடத்த உனக்கு ஏதாவது தொழில் தெரியுமா, தம்பி?' என்று அவனை நோக்கிக் கேட்கிறான். 'ஒ, தெரியுமே-நான் பெரிய எழுத்தாளனாக்கும் எனக்கு வான சாஸ்திரம் தெரியும், கணித சாஸ்திரம் தெரியும். என்றெல் லாம் அளக்கிறான் அவன். 'உஸ் ..' என்று அவன் வாயைப் பொத்திவிட்டு, தையற்கா ரன் சிரித்துக்கொண்டே ஒரு கோடாரியையும் ஒரு துண்டுக் கயிறையும் எடுக்கிறான் அவற்றை அவனிடம் கொடுத்து, 'அதெல்லாம் இந்தக் காலத்தில் பிரயோசனமில்லை, அப்பா அதற்குவேண்டிய கலையுணர்ச்சி இந்த நாட்டு மக்களிடம் கிடை யாது. நீ பேசாமல் இந்தக் கோடாரியை எடுத்துக்கொண்டு காட்டுக்குப் போ விறகை வெட்டி எடுத்துக்கொண்டு நாட்டுக்கு வா! யாராவது அதை வாங்கிக் கொண்டு காசு கொடுப்பார்கள்; காலந் தள்ளலாம்!' என்கிறான் இந்த உண்மை காலஞ்சென்ற புதுமைப்பித்தனுக்கும் தெரியா மலில்லை. அவரே 'நமது இலக்கியம்' என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்: