பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22, விந்தன் கட்டுரைகள் 'இப்பொழுது நமக்கு இருக்கும் கலையுணர்ச்சியைப் பற்றி எண்ணும்பொழுதெல்லாம் ஒளவைக் கிழவி ஒர் அரசனுக்கு கொடுத்த சர்டிபிகேட்தான் என்னுடைய நினைவிற்கு வருகிறது ' 'இருள் தீர் மணிவிளக் கத்தெழிலாள் கோவே! குருடேயும் அன்று நின் குற்றம்-பொருள்சேர் பாட்டுச் சுவையும் பயிலாதன இரண்டு ஒட்டைச் செவியும் உள!' 'இருளை விரட்டும்படியான ரத்னாபரணங்களை வாரி அணிந்து கொண்டு சிம்மாசனத்தில் பெருமிதமாய் உட்கார்ந்திருக் கும் அழகுமிக்க அரசனே! மனிதனின் அற்புதமான கனவுகளை யெல்லாம் கல்லில் கொண்டிருக்கும் சிற்பங்களைப் பொருத்தமட் டில் நீ திருதராஷ்டிரன்தான்! - அந்தோ, அது மட்டுமா? - அலைமேல் அலையாக எழும் சப்த ஜாலங்களான கவிதையை அனுபவித்தறியாத இரண்டு ஒட்டைச் செவிகளும் உண்டு, உனக்கு' என்று இரங்குகிறாள் அந்த எழிலாள் பெருமானின் வம்சவளர்ச்சியோ தமிழ்நாடு என்று சொல்லும்படி இருக்கிறது நமது கவியுணர்ச்சி இவ்வாறு கூறியிருப்பவர் ஏன் கதை எழுதினார், கட்டுரை எழுதினார், கவிதை எழுதினாரென்றால் அதுதான் எழுத்தாளனின் குறும்பு, கிறுக்கு, பைத்தியம்: உலகத்தில் தொன்றுதொட்டு இருந்துவரும் கொடுமைகளையும் கொடுரங்களையும், அநீதிகளை யும், அக்கிரமங்களையும், விசித்திரங்களையும், விநோதங்களை யும் முதன் முறையாகப் பார்த்தபோது புத்தர் பெருமானுக்கு ஞானப் பைத்தியம் பிடித்தது. போதி மரத்தை நாடினார். புதுமைப் பித்தனுக்கோ எழுத்துப் பைத்தியம் பிடித்தது. பத்திரிக்கைத் தொழிலைத் தேடினார்