பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகையிலையும் புதுமைப்பித்தனும் 23 புத்தர் வாழ்க்கையின் துன்பங்களைக் கண்டு வெகுண்டு ஓடினார். புதுமைப்பித்தன் அவற்றை எதிர்த்து நின்று போராடினார். இரண்டும் பைத்தியங்கள்தான் என்றாலும் எழுத்துப் பைத்தி யம் ஒரு தனி ரகம். உங்களுக்குக் கதை தெரியுமா?- எழுத்தாளர் ஒருவர் பைத்தி யக்கார ஆஸ்பத்திரியில் இருந்தார். அவர் ஒரு நாள் டாக்டரை நோக்கி, தயவுசெய்து எனக்குப் பேனாவும் காகிதமும் கொடுங்கள், கதை எழுத வேண்டும்' என்றார். டாக்டருக்குச் சந்தோஷம் தாங்கவில்லை. மனுஷனுக்குப் பைத்தியம் தெளிந்து விட்டது என்று கருதி, உடனே அந்த எழுத்தாளருக்கு அவர் பேனாவும் காகிதமும் கொண்டுவந்து கொடுக்கச் சொன்னார். எழுத்தாளர் அவற்றை வாங்கி ஒரு கனைப் புக் கனைத்துவிட்டு எழுதத் துவங்கினார். எழுதி முடித்ததும் அதை டாக்டரிடம் கொடுத்துவிட்டு, அவரை ஒரு ராஜபார்வை' பார்த் தார். டாக்டர் அதை ஆவலுடன் வாங்கிப் படிக்க ஆரம்பித்தார். 'ஓர் ஊரில் ஒரு ராஜா இருந்தார். அந்த ராஜாவுக்கு ஒரு நாள் அடுத்த ஊரிலிருக்கும் தன் ராணியைப் பார்க்க வேண்டு மென்று ஆசை வந்துவிட்டது. உடனே தன்னை அழகாக அலங் கரித்துக்கொண்டு அவர் அரண்மனையை விட்டு வெளியே வந் தார் 'மந்திரியே கொண்டுவா, குதிரையை' என்றார். குதிரை வந்து நின்றது. ஒரே தாவாகத் தாவி அதன் மீது ஏறினார். லகானை மிடுக்குடன் இழுத்துப் பிடித்து, "ஹை ஹை என்று அதட்டினார் ஹை ஹை என்று அதட்டினார் .. ஹை ஹை என்று அதட்டினார் ஹை ஹை என்று அதட்டினார் ஹை ஹை என்று அதட்டினார் கதை மேலே போகவில்லை; ஹை ஹை என்று அதட்டினார்:' என்பதிலேயே பக்கம் பக்கமாகப் போய்க்கொண்டிருந்தது. டாக்ட ருக்கு ஒன்றும் விளங்கவில்லை. அவர் திரு, திரு' என்று விழித்துக்கொண்டே, 'என்ன லார், இது கதை. மேலே போன் வில்லையே?' என்றார்.