பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 விந்தன் கட்டுரைகள் 'நான் என்ன செய்யட்டும், ஸார் குதிரை என்ன அதட்டியும் மேலே போகவில்லை; 'மக்கர் செய்துவிட்டது அப்புறம் கதை எப்படி மேலே போகும்?' என்றார் அந்த எழுத்தாளர் பைத்தியம் இந்தக் கதையை இங்கே எதற்காகச் சொல்கிறேனென்றால், பைத்தியம் பிடித்த நிலையிலும் அந்த எழுத்தாளரின் மமதையும் கற்பனையும் எப்படி வேலை செய்கிறதென்று பாருங்கள் என்பதற் காகத்தான்! ஏறக்குறைய இம்மாதிரிப் பைத்தியந்தான் நம் புதுமைப்பித்த னையும் பிடித்திருந்தது அதனால் அவர் தம்மை மறந்து, தம் மனைவி மக்களை மறந்து ஆத்திரத்தோடு எழுதினார், ஆவேசத் தோடு எழுதினார், அடிவயிற்றைக் கையால் அழுத்திப் பிடித்துக் கொண்டு எழுதினார், ஆயாசத்தால் ஆகாயத்தில் பறந்துகொண்டு எழுதினார்! 'உள்ளத்தில் ஒளி உண்டானால் வாக்கினிலே ஒளி உண்டாகும்' என்றார் பாரதியார் அந்த ஒளி புதுமைப்பித்தனின் உள்ளத்தில் உதயமாகியிருந்தது எனவே, அவருடைய கதைகளிலும் கட்டுரை களிலும் அந்த ஒளி சுடர்விட்டுப் பிரகாசித்தது ஆனால் அவற்றைத் தக்கபடி அனுபவிக்க, அவற்றை எழுதிய மேதையைத் தக்கபடி உபசரிக்க, தமிழர்களின் உள்ளத்தில் அப்போது ஒளி உதயமாகவில்லை இந்த நிலையில் அவர் என்ன எழுதி என்ன பயன்? - உண்மையான கலையுணர்ச்சியற்ற தமிழர்கள் அவருடைய கவி தைகளைப் படித்துவிட்டுக் கற்சிலைகளைப் போல் இருந்துவிட் டார்கள், நண்பர்களோ 'உங்கள் கதைகளைப் படித்தோம்; ரொம்ப ரொம்ப பிரமாதம், போங்கள்!' என்று பாராட்டுவதோடு நின்று விட்டார்கள்